தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ரம்யா செய்த சதி.. பைத்தியமான தீபா.. கதிகலங்கி நிற்கும் கார்த்தி! - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: ரம்யா செய்த சதி.. பைத்தியமான தீபா.. கதிகலங்கி நிற்கும் கார்த்தி! - கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
May 31, 2024 03:17 PM IST

Karthigai Deepam: ரம்யா செய்த சதி.. பைத்தியமாகும் தீபா, கார்த்திக் செய்ய போவது என்ன? - கார்த்திகை தீபம் அப்டேட் இங்கே

Karthigai Deepam: ரம்யா செய்த சதி.. பைத்தியமான தீபா.. கதிகலங்கி நிற்கும் கார்த்தி! -  கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: ரம்யா செய்த சதி.. பைத்தியமான தீபா.. கதிகலங்கி நிற்கும் கார்த்தி! - கார்த்திகை தீபம் அப்டேட்

ட்ரெண்டிங் செய்திகள்

கொந்தளித்த ரம்யா

ரம்யா யார் இப்படி எழுதினது என்று சத்தம் போட, எல்லாரும் நாங்க இல்ல என்று சொல்கின்றனர். பிறகு வேலையை பாருங்க போங்க என்று துரத்தி விட்டு, கார்த்திக்கிடம் சாரி என்று கேட்க, அவன் நான் எதுவும் தப்பா எடுத்துக்கல என்று சொன்னான். இதையடுத்து ரம்யா சுவற்றில் இப்படி எழுதியவனை கூப்பிட்டு அவனுக்கு பணத்தைக் கொடுத்து, இந்தா உன்னுடைய செட்டில்மென்ட், இனிமே உனக்கு இங்க வேலை இல்ல என்று சொல்கிறாள். 

அதற்கு அவனோ, நீங்க சொல்லி தானே மேடம் அப்படி எழுதினேன் என்று கேட்க, நீ எதிர்பார்த்ததை விட இதுல நிறைய பணம் இருக்கு. இனிமே நீ இங்க இருந்தா நல்லது இல்ல என்று அனுப்பி வைக்கிறாள். அதனை தொடர்ந்து கார்த்திக் தீபாவுடன் ஹாஸ்பிடல் வர, அப்போது தீபாவை குத்திய ரவுடி சிக்கினான். இதனையடுத்து, கார்த்திக் அவனது துரத்திச் செல்கிறான். தப்பி வந்த ரவுடி, ரம்யாவுக்கு போனை போட்டு விஷயத்தை சொல்ல, அவள் உஷாரா இரு, அவன்கிட்ட மாட்டிடாத என்று எச்சரிக்கிறாள். 

போன் போட்டுக்கொடுத்த தீபா 

பிறகு ரம்யா தீபாவுக்கு போனை போட்டு நலம் விசாரிக்க, அவள் என் ஹஸ்பண்ட் கிட்ட பேசு என்று கார்த்திக்கிடம் போனை கொடுக்கிறாள். இதில் கடுப்பாகும் ரம்யா, பேசாமல் அமைதியாகவே இருக்க, கார்த்திக் லைன்ல தான் இருக்காங்க ஆனால் பேச மாட்றாங்க என்று தீபாவிடம் போனை கொடுக்கிறான். 

பிறகு தீபா பேச, ரம்யா எனக்கு வேறொரு கால் வருது.. அப்புறம் பேசுறேன் என்று சொல்லி போனை வைத்து விடுகிறாள். தொடர்ந்து ஒரு டேப்லட் குறித்து தேடுகிறாள், பிறகு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்யும் ஒருவரை கூப்பிட்டு அந்த மாத்திரையை வாங்குகிறாள், மாத்திரையை கொண்டு வந்து கொடுத்தவர் பார்த்து யூஸ் பண்ணுங்க.. இது ரொம்ப மோசமான மாத்திரை என்று சொல்லி கிளம்புகிறார்.

சைக்கோவாக மாறிய தீபா 

அடுத்து பழத்துடன் அபிராமி வீட்டிற்கு வரும் ரம்யா, தீபாவுக்கு ஜூஸ் போட்டு கொடுங்க.. நீங்க போடுறீங்களா? இல்ல நானே போடவா என்று கேட்க, அபிராமி நானே போட்டு தரேன் என்று ஜூஸ் போட்டு கொண்டு வருகிறாள். நீங்க தீபாவை உட்கார வைங்க, நான் குடிக்க வைக்கிறேன் என்று சொல்லி ஜூஸில் மாத்திரையை கலந்து கொடுக்க, அதை குடித்த தீபா கொஞ்ச நேரத்தில் எல்லாரிடமும் கோபப்பட்டு பொருட்களை தூக்கி போட்டு சைக்கோ போல் நடந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்