Karthigai Deepam: ‘பல்போ பல்பு.. அவமானப்பட்ட ரம்யா.. வாய் கொடுத்து வாங்கி கட்டிய தீபா! -கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘பல்போ பல்பு.. அவமானப்பட்ட ரம்யா.. வாய் கொடுத்து வாங்கி கட்டிய தீபா! -கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: ‘பல்போ பல்பு.. அவமானப்பட்ட ரம்யா.. வாய் கொடுத்து வாங்கி கட்டிய தீபா! -கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Published May 28, 2024 12:09 PM IST

Karthigai Deepam: கத்தியுடன் தீபாவை குத்த துரத்தும் ரவுடி.. கார்த்திக்கிடம் அடுத்தடுத்து பல்பு வாங்கிய ரம்யா - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: ‘பல்போ பல்பு.. அவமானப்பட்ட ரம்யா.. வாய் கொடுத்து வாங்கி கட்டிய தீபா! -கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: ‘பல்போ பல்பு.. அவமானப்பட்ட ரம்யா.. வாய் கொடுத்து வாங்கி கட்டிய தீபா! -கார்த்திகை தீபம் அப்டேட்

ரம்யா யோசனையில் உட்கார்ந்திருக்க, அப்போது திடீரென அவளுக்கு ஆபிஸில் கேக் வெட்டி கார்த்திக்கு ஊட்டி விட்டு மோதிரம் போடுவது போல எண்ணம் வருகிறது. அதை அப்படியே உண்மையாக்க வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். மேனேஜருக்கு போனை போட்டு எனக்கு பிறந்த நாள்னு சொல்லி, கேக் வெட்ட எல்லா ஏற்பாடுகளையும் செய் என்று சொல்கிறாள்.

பல்பு கொடுத்த கார்த்திக்

அடுத்து ஆபிஸ் வரும் ரம்யா எல்லாரையும் கூட்டி வைத்து கேக் வெட்டி கார்த்திக்கு ஊட்டி விட போக, அவன் கைலயே கொடுத்துடுங்க என்று சொல்லி வாங்கி கொள்கிறான். இதனால் ரம்யா பல்பு வாங்க, அடுத்து நல்ல வேலை செய்யுற 5 பேருக்கு நான் மோதிரம் போட போறேன் என்று சொல்லி, பெயர்களை படிக்கத் தொடங்குகிறாள். கார்த்திக் இந்த முறை நோ சொல்ல கூடாது என்பதற்காக ரம்யா எல்லாருக்கும் அவள் கையாலேயே மோதிரம் போட்டு விடுகிறாள்.

அடுத்து ஐந்தாவது ஆளாக கார்த்திக் பெயரை சொல்லி கூப்பிட அவன் நான் வேலைக்கு சேர்ந்தே 10 நாள் தான் ஆச்சு, எனக்கு எதுக்கு மோதிரம் என்று கேட்க, ரம்யா உங்களால் கம்பெனிக்கு லாபம் கிடைச்சிருக்கு, நல்லா வேலை செய்யுறீங்க என்று சொல்லி மோதிரத்தை போட போக, இந்த முறையும் கார்த்திக் என் கையில் கொடுத்துடுங்க என்று வாங்கி கொள்கிறான். 

பல்போ பல்பு 

இதனால் மீண்டும் ரம்யா பல்பு வாங்குகிறாள். இதையெல்லாம் நோட் பண்ண பி.ஏ ரம்யாவிடம், உங்களையும் கார்த்திக்கையும் பார்க்கும் போது ராமன் சீதையை பார்க்குற மாதிரி இருப்பதாக சொல்கிறான். இதில் கோபமடைந்த ரம்யா யாரை யாரோட சேர்த்து பேசுற என்று அறைகிறாள்.

அடுத்து தீபா மார்க்கெட்டில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது,ரவுடி ஒருவன் வேண்டுமென்றே மோத அவனுடன் வாக்குவாதத்தில் தீபா ஈடுபட்டாள். தொடர்ந்து அவனை அறையப் போக, அவன் கத்தியை எடுத்து குத்த வர, தப்பி ஓடி வரும் தீபா கார் மீது மோதி கீழே விழுகிறாள். தீபா அடிபட்டு கிடப்பதாக கார்த்திக்கு போன் வர அவனும் பதறியடித்து ஓடி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.