தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Zee Tamil Karthigai Deepam: 'கார்த்திக்கிற்கு கடும் போட்டி;அப்ப கல்யாண கொண்டாட்டம்’-கார்த்திகை தீபம் அப்டேட்

Zee Tamil Karthigai deepam: 'கார்த்திக்கிற்கு கடும் போட்டி;அப்ப கல்யாண கொண்டாட்டம்’-கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
May 23, 2024 02:41 PM IST

Zee Tamil Karthigai deepam: கார்த்திக்காக போட்டி போட்டு கிஃப்ட் வாங்கும் தீபா, ரம்யா.. கல்யாண கொண்டாட்டத்தில் நடக்க போவது என்ன? - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

Karthigai deepam: ‘ கார்த்திக்கிற்கு போட்டி போடும் தீபா, ரம்யா; அப்ப கல்யாண கொண்டாட்டம்’ - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai deepam: ‘ கார்த்திக்கிற்கு போட்டி போடும் தீபா, ரம்யா; அப்ப கல்யாண கொண்டாட்டம்’ - கார்த்திகை தீபம் அப்டேட்

ட்ரெண்டிங் செய்திகள்

இன்று நடக்கப்போவது என்ன? 

மீனாட்சியும், மைதிலியும் தீபாவிடம், இந்த வீடு இன்னும் பெருசா தாராளாக இருக்கு என்று பேசிக்கொள்கின்றனர். அடுத்து தீபாவிடம், இன்னைக்கு சாயங்காலம் நடக்க போற ஃபங்ஷனில் கார்த்திக்கு என்ன கிஃப்ட் கொடுக்க போற என்று கேட்க, தீபா இதுவரைக்கும் யோசிக்கல என்று சொல்கிறாள். திடீரென அவளுக்கு ஒரு யோசனை வந்து, கடைக்கு கிளம்பி வருகிறாள்.

மறுபக்கம் ரம்யா தன்னுடைய அப்பாவிடம் இன்னைக்கு ஒரு ஃபங்ஷனுக்கு போகணும் என்று சொல்கிறாள். ரம்யாவின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து, அவர் பூரிப்படைந்தார். பிறகு ஒரு கிஃப்ட் வாங்கணும் என்று சொல்லி, அவளும் கிளம்பி கடைக்கு வருகிறாள். கடைசியாக தீபாவும், ரம்யாவும் ஒரே கடைக்கு வர, இரண்டு பேரும் சந்தித்து கொள்கின்றனர்.

என்ன கிஃப்ட் ?- கலந்து கொண்ட ரம்யா, தீபா

இந்த சந்திப்பை தொடர்ந்து, ரம்யா உன் ஹஸ்பண்ட்டுக்கு என்ன கிஃப்ட் வாங்க போற என்று கேட்க, தீபா அபிராமி மற்றும் கார்த்தியின் சிறு வயது போட்டோக்களை ஒன்று சேர்த்து, ஒரு ஃபிரேம் போட போவதாக சொல்கிறாள். 

பிறகு தீபா, ரம்யாவிடம் இதே கேள்வியை கேட்க, அவள் ராமன் சீதை போட்டோ ஒன்றை வாங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

வீட்டிற்கு வந்த ரம்யா கார்த்திக் சட்டையை முகர்ந்து பார்த்து, ஆட்டம் பாட்டம் என ரொம்ப சந்தோசமாக உணர்ந்தாள். மறுபக்கம், அபிராமி குடும்பத்தினர் எல்லோரும் ஜோசியர் சொன்னபடி வீடு மாறினர். 

தொடர்ந்து பழைய வீட்டை சுத்தம் செய்து, டெக்கரேட் செய்து, அடுத்த நாச்சியாராக பார்க்கப்படும் தீபாவை வைத்து, பாலை காய்ச்ச வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதற்கேற்றார் போல தீபாவும் பாலை காய்ச்ச, அனைவரும் அதை பார்த்து சந்தோசப்பட்டனர். 

நாளைக்கே வச்சிக்கலாம்

அதனை தொடர்ந்து கார்த்திக், தீபா திருமண நாள் கொண்டாட்டத்தை நாளைக்கே வச்சிக்கலாம் என்று முடிவெடுத்தனர். அபிராமி தீபாவிடம் கார்த்திக்கு என்ன கிஃப்ட் கொடுக்க போற என்று கேட்க, தீபா இன்னும் முடிவு பண்ணல அத்தை என்று சொன்னாள். 

அடுத்து கார்த்தியிடம் நீ என்ன பா கிஃப்ட் கொடுக்க போற என்று கேட்டனர். அவனும் என்ன கொடுக்கிறதுனு இன்னும் முடிவு பண்ணல என்று சொன்னான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய, கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

எங்களை பற்றி: 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்