Karthigai Deepam: ‘பக்கவாக காய் நகர்த்தும் ஐஸ்வர்யா.. கார்த்தியை தாரை வார்க்கும் தீபா’ - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திக் தீபாவின் கல்யாண கொண்டாட்டத்தில் ரம்யா.. உண்மை உடையும் நேரத்தில் வந்த ட்விஸ்ட்! - கார்த்திகை தீபம் சீரியலில்ன் ஞாயிறு தின எபிசோட் அப்டேட் இங்கே!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
காதலுக்கு ஓகே சொன்ன கார்த்திக்
ஐஸ்வர்யா கார்த்திக், காதலுக்கு ஓகே சொல்வது போல் ரம்யாவுக்கு லெட்டரை அனுப்பினாள். அந்த லெட்டரில், ஐ லவ் யூ டூ எனவும் ஆனால், இப்போதைக்கு நம்முடைய காதல் வெளியில் தெரிய வேண்டாம்; எனக்கு சில குடும்ப பிரச்சினைகள் இருக்கிறது. அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் என்பது போலவும் எழுதி இருந்தது.
இந்த நிலையில், கார்த்திக் காதலை ஏற்று கொண்ட சந்தோஷத்தில் ரம்யா பூரித்தாள். மறுபக்கம் அபிராமி கார்த்திக், தீபா கல்யாணத்தில் நான் எதுவுமே பண்ணல, அவங்களுடைய கல்யாண நாளையாவது சிறப்பா கொண்டாடணும்னு நினைப்பதாக சொல்ல, அருணாச்சலம் இந்த வீட்டோட அடுத்த நாச்சியார் தீபாதான். நீ கல்யாணமாகி வந்த புதுசுல எப்படி இருந்தாயோ, அதே மாதிரி தான் அவளும் இருக்கா என்று சொல்கிறார்.
விவரம் தெரியாமல் நடக்கும் தீபா
இதையடுத்து, ரம்யா தீபாவை கோயிலில் சந்தித்து அவர் என்னுடைய காதலுக்கு ஓகே சொல்லி விட்டதாக சொல்ல, வாழ்த்து சொல்லும் தீபா, அப்பா கிட்ட சொல்ல வேண்டியது தானே என்று சொன்னாள். அவர் கிட்டா சொன்னா உடனே கல்யாணம்னு சொல்லுவார். ஆனால், அது இப்போ முடியாது என்று சொல்கிறாள்.
இங்கே நடப்பது அனைத்தையும் ஒட்டு கேட்கும் ஐஸ்வர்யா, ரியாவுடன் கூட்டு சேர்ந்து, ரம்யாவை வைத்து கேம் விளையாட பிளான் போடுகிறாள். இதையடுத்து ரம்யாவின் அப்பாவிடம், தீபா ரம்யாவின் காதல் குறித்து சொல்ல, அவர் எம்பிளாயியா என்று முதலில் ஷாக் ஆனார். ஆனால், ரம்யா எல்லாத்தையும் யோசித்து சரியா தான் முடிவு எடுத்திருப்பா என்று சம்மதம் சொல்கிறார்.
கல்யாண நாள் கொண்டாட்டம்
மறுபக்கம் அபிராமி கார்த்திக் தீபா கல்யாண நாளை பெருசா கொண்டாட போறதா வீட்டில் உள்ளவர்களிடம் சொல்கிறாள். அடுத்த நாள் அதற்கான ஏற்பாடுகள் நடக்க, ரம்யா இவர்களது கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு வருகை தருகிறாள். கார்த்திக் ரூமில் ரெடியாகி கொண்டிருக்கிறான். ரம்யா அவனை பார்த்து விடுவாளா என்ற பில்டப் எகிறுகிறது.
திடீரென்று வந்த போன்கால்
கார்த்திக் கீழே இறங்கி வரும் சமயத்தில் ரம்யாவுக்கு போன் வருகிறது. அதில் பேசும் ஒருவன், உங்க அப்பாவுக்கு உடம்பு முடியல, ஹாஸ்பிடலில் இருப்பதாக பேச வைக்கிறாள். இதனால் ரம்யா பதறியடித்து கிளம்பி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்