தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘ரம்யா காதலனுக்கு தீபா காதல் கடிதம்.. ஆப்பு வைத்த ஐஸ்வர்யா..’ - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: ‘ரம்யா காதலனுக்கு தீபா காதல் கடிதம்.. ஆப்பு வைத்த ஐஸ்வர்யா..’ - கார்த்திகை தீபம் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
May 17, 2024 03:02 PM IST

Karthigai Deepam: ரம்யாவின் காதலனுக்காக காதல் கடிதம் எழுதிய தீபா.. ஐஸ்வர்யா செய்த சதி - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: ‘ரம்யா காதலனுக்கு தீபா காதல் கடிதம்.. ஆப்பு வைத்த ஐஸ்வர்யா..’ - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: ‘ரம்யா காதலனுக்கு தீபா காதல் கடிதம்.. ஆப்பு வைத்த ஐஸ்வர்யா..’ - கார்த்திகை தீபம் அப்டேட்

ட்ரெண்டிங் செய்திகள்

 

தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

தீபா போட்ட கண்டிஷன்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா கார்த்திக்கிடம், இனிமே யாரையும் பைக்கில் கூட்டிக்கொண்டு போகக்கூடாது என கண்டிஷன் போட்ட நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் 

இரவு நேரத்தில் தீபா துணி துவைத்துக் கொண்டிருக்க அங்கு வந்த அபிராமி, இந்த நேரத்தில் இங்க என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்க, அவரோட துணியை துவைச்சிட்டு இருக்கேன் என்று சொன்னாள். 

மேலும், அவரிடம் நான் துவைக்கிறேன் என்று சொன்னதற்கு அவர் வேண்டாம் என்று சொல்லிட்டார். அதனால்தான் அவர் தூங்குற வரைக்கும் காத்திருந்து, துவைச்சிட்டு இருக்கேன் என்று சொன்னாள். 

சரியா வளக்கல

இதைக் கேட்ட அபிராமி, நீ எவ்வளவு நல்லவளா இருக்க, உன்னை புரிஞ்சுக்காம, நான் ரொம்ப உன்னை காயப்படுத்திட்டேன் என்று வருத்தப்படுகிறாள். மேலும், நான் என் புள்ளைங்கள சரியா வளக்கல என்று அபிராமி நொந்து கொள்ள, அவருக்கு தீபா ஆறுதல் சொல்ல, இருவருக்கும் இடையேயான பிணைப்பு அதிகமாகிறது.

அதன் பிறகு, மறுநாள் காலையில் தீபா ரம்யாவை கோயிலில் சந்தித்து பேச, ரம்யா என்னால சரியா சாப்பிட முடியல, தூங்க முடியல என புலம்பினாள். உடனே, இது காதல் பண்ற வேலை என்று கலாத்த தீபா, ரம்யாவின் காதலனுக்காக ஒரு காதல் கடிதத்தை கொடுத்து, இதை உன் ஆள் கிட்ட கொடு. கண்டிப்பாக உன்னை ஏத்துப்பான் என்று கொடுக்கிறாள். 

இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்த ஐஸ்வர்யா தீபாவின் வாழ்க்கையில் விளையாட சரியான வாய்ப்பு கிடைத்திருப்பதாக நினைத்து சந்தோஷப்படுகிறாள். அடுத்ததாக ஆனந்த் வீட்டுக்கு வரும்போது, தீபாவும் மைதிலியும், மீனாட்சி கோயிலுக்கு போய் இருக்காங்க அநேகமா அந்த மாப்பிள்ளையை பார்க்க தான் நினைக்கிறேன். மீனாட்சி கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுவாங்க போல என்று பேசிக் கொண்டிருக்க, இதைக்கேட்ட ஆனந்த், பதறி அடித்து கிளம்ப, கார் ஸ்டார்ட் ஆகாமல் நின்று போய் விடுகிறது. 

இதையடுத்து, அவன் ஒரு ஆட்டோவை பிடித்து கோயிலுக்கு வேக வேகமாக வருகிறான். அங்கு, கோயிலில் கல்யாணம் மீனாட்சிக்கு இல்லை என்று தெரிந்து, அவன் நிம்மதி அடைகிறான். 

அதனைதொடர்ந்து அங்கு வந்த மீனாட்சி, என்ன பதறிட்டீங்க போல என்று கேட்க, அப்படியெல்லாம் இல்லையே, நான் கோயிலுக்குதான் வந்தேன் என்று சொல்லி சமாளித்து, அங்கிருந்து கிளம்பிச் செல்கிறான். அதை வைத்து, தீபா ஆனந்துக்கு உங்க மேல காதல் இருக்கு என்பதை நிரூபிக்கிறாள்.

மறுபக்கம் தீபா கொடுத்த காதல் கடிதத்துடன் ஆபீஸ் வந்த ரம்யா, அதை பைலுக்குள் வைத்து, கார்த்தியிடம் கொடுக்க சொல்லி அனுப்புகிறாள். இதற்கிடையே உள்ளே வந்த ஐஸ்வர்யா, பணத்தை கொடுத்து தீபா கொடுக்க நினைத்த கடிதத்திற்கு மாற்றாக வேறொரு கடித்தை வைத்து விடுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம், சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்