தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கண் விழித்த அபிராமி.. ஆதாரங்களுடன் சிக்கிய ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

Karthigai Deepam: கண் விழித்த அபிராமி.. ஆதாரங்களுடன் சிக்கிய ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 10, 2024 02:13 PM IST

ஐஸ்வர்யா ஸ்டேஷனுக்கு வந்து அம்மாவிடம் நல்ல வேளை என்னை காப்பாத்தீட்டீங்க, இல்லனா என் வாழ்க்கையே போய் இருக்கும் என்று சொல்கிறாள். அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா அந்த தீபாவையும், கார்த்தியையும் சும்மா விட மாட்டேன் என்று சொல்ல, ராஜேஸ்வரி எதுவும் செய்து மாட்டிக்காத என்று எச்சரிக்கிறாள்.

கார்த்திகை தீபம் சீரியல்!
கார்த்திகை தீபம் சீரியல்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் உயிரோடு புதைக்கப்பட்ட அபிராமியை மீட்டெடுத்த ஹாஸ்பிடலில் அனுமதித்தான். அதனைதொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: 

வீட்டிற்கு வரும் கார்த்திக், அம்மாவோட இந்த நிலைமைக்கு ஐஸ்வர்யா அண்ணி தான் காரணம், அவங்க தான் எல்லா வேலையும் பண்ணி இருக்காங்க என்று சொன்னதும், அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஐஸ்வர்யா எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, என்னை உனக்கு பிடிக்காது என்பதால், தேவையில்லாமல் பழி போடாத என்று வாக்கு வாதத்தில் ஈடுபடுகிறாள்.

கார்த்திக்கோ, அண்ணி எனக்கு எல்லாமே தெரியும், தயவு செய்து பொய் சொல்லிட்டு இருக்காதீங்க என்று சொல்ல, ஐஸ்வர்யா ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசாத என்று சாடுகிறாள். அந்த நேரம் போலீஸ் வீட்டிற்கு வருகிறது. ஐஸ்வர்யா வாட்ஸ் சப் காலில் பேசிய அனைத்து ரெக்கார்டும் இருக்கிறது என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

ஐஸ்வர்யாவை காப்பாற்றிய ராஜேஸ்வரி

ஐஸ்வர்யாவை காப்பாற்ற ராஜேஸ்வரி நான் தான் எல்லாத்தையும் பண்ணேன், என் பொண்ணை அவங்க அடிச்சதால் அந்த கோபத்தில் இப்படி பண்ணிட்டேன் என்று சொல்ல, கார்த்திக் அதை நம்ப மறுக்கிறான், எல்லோரும் கேள்வி கேட்க ஐஸ்வர்யாவும் ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேள்வி கேட்டு டிராமா போடுகிறாள். இதனையடுத்து போலீஸ் ராஜேஸ்வரியை கைது செய்து ஜெயிலில் அடைக்கிறது.

தீபாவையும், கார்த்தியையும் சும்மா விட மாட்டேன் - கொந்தளித்த ஐஸ்வர்யா! 

பிறகு ஐஸ்வர்யா ஸ்டேஷனுக்கு வந்து அம்மாவிடம் நல்ல வேளை என்னை காப்பாத்தீட்டீங்க, இல்லனா என் வாழ்க்கையே போய் இருக்கும் என்று சொல்கிறாள். அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா அந்த தீபாவையும், கார்த்தியையும் சும்மா விட மாட்டேன் என்று சொல்ல, ராஜேஸ்வரி எதுவும் செய்து மாட்டிக்காத என்று எச்சரிக்கிறாள். 

கண் விழிக்கும் அபிராமி.. கண் கலங்கிய கார்த்திக்!

மறுபக்கம் அபிராமி கண் விழிக்க, கார்த்திக் ஏன் மா இப்படி பண்ணீங்க என்று கேள்வி கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

கார்த்திக் ரவுடிகளிடம் சண்டையிட்டு கொண்டிருக்க, மறுபக்கம் ரவுடி மணியும், அவனது ஆட்களும் சேர்ந்து அபிராமியை உயிரோடு புதைத்தனர். கார்த்திக் தன்னுடன் சண்டை போட்ட ரவுடிகளை அடித்து விட்டு உள்ளே நுழையும் போது, மணியும் அவனது ஆட்களும் எதிரில் வந்தனர். 

அவர்களை பிடித்து எங்க அம்மா எங்க டா என்று கேட்க, எங்களுக்கு தெரியாது என்று அவர்கள் உண்மையை மறைத்தனர். 

இதற்கிடையே கார்த்திக் அனுப்பிய லொகேஷனை வைத்து போலீஸ் தோப்புக்கு வந்து விட்டனர். தொடர்ந்து மொத்தமாக மணியையும், ரவுடிகளையும் கைது செய்து ஜெயிலுக்குள் அடைத்தனர். 

கார்த்திக்கிற்கு அம்மா அந்த தோப்புக்குள் தான் இருக்கிறார் என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருந்த நிலையில், தோட்டத்திற்குள் சென்று அபிராமியை அவன் தேட, அங்கிருந்த மண் வெட்டி, குவியல் உள்ளிட்டவற்றை பார்த்து சந்தேகப்பட்டு அந்த இடத்தை தோண்டினான். 

அப்போது அங்கு அபிராமி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரை வெளியே எடுத்தான். தொடர்ந்து மூச்சு பேச்சு இல்லாமல் இருக்கும் அம்மாவை தூக்கி கொண்டு ஹாஸ்பிடலில் அனுமதித்தான். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்