Karthigai deepam:ஜெயிலுக்குள் தள்ளப்பட்ட ஆனந்த்.. ஐஸ்வர்யா செய்த உதவி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
ஸ்டேஷனுக்கு வரும் ராஜேஸ்வரி நீ செய்தது பெரிய தப்புதான், இருந்தாலும் நான் உன்ன பெயிலில் எடுக்கிறேன். உன்னை நம்பி வந்த ரியாவுக்கு தானே சப்போர்ட் பண்ணனும் என்று பேசுகிறாள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம் தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆனந்தை கைது செய்ய வீட்டுக்கு வந்த போலீஸ், மீனாட்சி கம்ப்ளைன்ட் கொடுத்ததாக சொன்ன நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்!
கார்த்திக், ஆனந்த் செய்தது பெரிய தப்பு. அதனால அவன் கொஞ்ச நாளைக்கு ஜெயிலில் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று சொல்ல, அபிராமியும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறாள். இதையடுத்து போலீஸ் ஆனந்தை கைது செய்து செய்கிறது.
இதையடுத்து ஐஸ்வர்யா மற்றும் ராஜேஸ்வரி என இருவரும் கூட்டு சேர்ந்து ஆனந்தை தங்களது கைக்குள் கொண்டு வர திட்டம் போடுகின்றனர்.
ஸ்டேஷனுக்கு வரும் ராஜேஸ்வரி நீ செய்தது பெரிய தப்புதான், இருந்தாலும் நான் உன்ன பெயிலில் எடுக்கிறேன். உன்னை நம்பி வந்த ரியாவுக்கு தானே சப்போர்ட் பண்ணனும் என்று பேசுகிறாள்.
அதுமட்டுமின்றி நான்தான் உன்னை பெயிலில் வெளியே எடுத்தேன் என்ற விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சா, பெரிய பஞ்சாயத்து ஆகிடும் என்று சொல்ல, ஆனந்தோ இப்போதைக்கு வெளியில் வந்தால் போதும் என்பதால் இதற்கு ஒப்புக்கொண்டு இவர்களுடன் கைகோர்க்கிறான்.
வெளியே வந்த ஆனந்த் கோபத்துடன் வீட்டுக்கு வந்து இனிமே எதுவும் சரிப்பட்டு வராது; ஸ்டேஷன் வரைக்கும் அனுப்பி என்னை ரொம்ப அவமானப்படுத்திட்டீங்க, சொத்த பிரிங்க என்று கேட்க, அபிராமி உடைந்து போகிறாள்.
இதற்கிடையே வந்த கார்த்திக் இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம்; கொஞ்சம் அமைதியா இரு, பார்த்துக்கலாம் என்று ஆனந்தை அமைதிப்படுத்துகிறான். உடைந்து போன அபிராமிக்கும் ஆறுதல் சொல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
ஆனந்த் ரியாவை கூப்பிட்டு நானும் இவளும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்ற உண்மையை உடைக்கிறான். இதைக்கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து உச்சக்கட்ட டென்ஷனான அபிராமி ஆனந்தை பிடித்து, உன்னையே நம்பி இருக்கவனுக்கு எப்படி துரோகம் பண்ண என பளார் பளார் என அறைகிறாள்.
ஆனந்த் எனக்கு ஆரம்பத்தில் இருந்து மீனாட்சி சுத்தமா பிடிக்கல நீங்கதான் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சீங்க. காலேஜ் படிக்கும் போதிலிருந்தே, நானும் ரியாவும் காதலிச்சோம். நீங்க கட்டாய படுத்தவேதான் குழந்தையும் பெத்துக்கிட்டோம். இந்த விஷயத்துல என்ன கேள்வி கேட்க உங்க யாருக்கும் தகுதியும் கிடையாது; உரிமையை கிடையாது. மீனாட்சி தான் பேசணும், அவ பேசட்டும்; நான் அவகிட்ட பேசிக்கிறேன் என ஆனந்த் பதிலடி தருகிறான்.
இதையெல்லாம் கேட்டு மீனாட்சி அப்படியே உடைந்து போய் படிக்கட்டில் உட்காருகிறாள். ஆனந்த் அவளிடம் பேச போக, கோபத்தில் கொந்தளிக்கும் மீனாட்சி, ஒரு கட்டத்தில் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி ஆனந்த் முகத்தில் வீசி எறிந்தாள்
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm

டாபிக்ஸ்