Karthigai Deepam: ரியா கழுத்தில் ஏறிய தாலி.. கல்யாண நாள் கொண்டாட தயாரான மீனாட்சி.. சோகத்தில் கார்த்திக்
ஆனந்த் எனக்கு ரியாவை ரொம்ப பிடிச்சிருக்கு; ரொம்ப நாளா நாங்க காதல் பண்ணிக்கிட்டு இருக்கோம்; நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ போறம் என்று சொல்ல,கார்த்திக் எவ்வளவு எடுத்து சொல்லியும், ஆனந்த் அவனது முடிவில் உறுதியாக இருக்கிறான்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா ரெஜிஸ்டர் ஆபீஸில் நடக்க இருந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அப்போது ஆனந்த், ரியா கோயிலில் கல்யாணம் செய்ய கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கார்த்திக் மற்றும் தீபா இருவரும் ஆனந்த் மற்றும் ரியாவை தேடி கோயில் கோயிலாக அலைய, ஒரு கோயிலுக்குள் ஆனந்த் ரியா கழுத்தில் தாலி கட்டி நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.
பிறகு கார்த்திக் ஆனந்தை சந்தித்து சத்தம் போட ,அவன் உன் பொண்டாட்டி மட்டும் என்ன ஒழுக்கமா பொய் சொல்லி தானே உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என தீபாவை வம்புக்கு இழுக்கிறான்.
அதற்கு கார்த்தி அப்ப எனக்கு கல்யாணம் ஆகல… ஆனா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, உன்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கா என சொல்கிறான்
ஆனந்த் எனக்கு ரியாவை ரொம்ப பிடிச்சிருக்கு; ரொம்ப நாளா நாங்க காதல் பண்ணிக்கிட்டு இருக்கோம்; நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ போறம் என்று சொல்ல,கார்த்திக் எவ்வளவு எடுத்து சொல்லியும், ஆனந்த் அவனது முடிவில் உறுதியாக இருக்கிறான். இதனையடுத்து வேறு வழியில்லாமல் கார்த்திக்கும் தீபாவும் அங்கிருந்து கிளம்பி வருகின்றனர்.
பிறகு ஆனந்தும் நாம வீட்டுக்கு போய் கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லிடலாம் என்று சொல்லி, ரியாவை கூட்டிக்கொண்டு கிளம்பி வருகிறான். முதலில் கார்த்திக் தீபா வீட்டுக்கு வர மீனாட்சி கல்யாண நாளை கொண்டாடுவதற்காக வீட்டையே டெக்ரேட் செய்து, ஆனந்திற்காக காத்திருப்பதை பார்த்து வருத்தப்படுகின்றனர்.
வீட்டில் உள்ளவர்கள் என்ன விசேஷம், எதுக்கு டெக்கரேஷன் என கேட்க, மீனாட்சி கல்யாண நாள் என சொல்லி ஆனந்த் வந்ததும் கேக் வெட்டலாம் என்று கூறினாள். இதனையடுத்து அபிராமி உட்பட எல்லோருமே அதுக்கு என்ன சந்தோஷமா செய்யலாம் என்று சொல்கின்றனர்.
இந்த நேரம் பார்த்து ரியாவுடன் வீட்டுக்கு வரும் ஆனந்த், அவளை காரிலேயே உட்கார வைத்துவிட்டு உள்ளே வருகிறான். இதனையடுத்து மீனாட்சி… வாங்க உங்களுக்காகத்தான் எல்லா டெக்கரேஷனும் பண்ணி இருக்கேன் என்று சந்தோஷமாக வரவேற்கிறாள். இதைப் பார்த்ததும் ஆனந்த் இவளுக்கு உண்மை எதுவும் தெரியல போல என புரிந்து கொண்டு நேரம் பார்த்து சொல்லலாம் என காத்திருக்கிறான்.
பிறகு கேக் வெட்ட தயாராக, அபிராமி உனக்காக இவ்வளவு செஞ்சு இருக்கா… ஆனா நீ என்ன பெங்களூரில் இருக்க… சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வாடா என செல்லமாக திட்டுகிறார். ஆனந்த் கேக் கட் பண்ணாமல் எனக்கு வேண்டாம் என சொல்லி ரியாவை வீட்டுக்குள் அழைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
கார்த்திக் தீபாவிடம் கல்யாணத்துக்கு முன்னாடியே உங்களுக்கு என் மேல காதல் இருந்திருக்கு; அதை ஏன் என்கிட்ட சொல்லல என்று கேட்டு, இனிமே நீங்க சார் எல்லாம் கூப்பிடாதீங்க; வேற மாதிரி மாமா வாங்க போங்கன்னு கூப்பிடுங்க என சொன்னான். திடீரென்று என்ன நினைத்தானோ தெரியவில்லை.. இல்லை வேண்டாம்.. அது ரொம்ப பழசா இருக்கு; மீனாட்சி எல்லாம் வாங்க போங்கன்னு கூப்பிடுறாங்க, நீங்களும் அதே மாதிரி சொல்லுங்க என்று சொல்ல, தீபா வாங்க போங்க என பேசி பழகுகிறாள்.
இதைத் தொடர்ந்து தீபா விளக்கு போடுவதற்காக கோயிலுக்கு கிளம்பிச் செல்ல, அவளுடன் அபிராமிக்கு பதில் மீனாட்சி வருகிறாள். இதையடுத்து தீபா, என்னக்கா எப்பவும் அத்த தான வருவாங்க… இன்னைக்கு நீங்க வந்து இருக்கீங்க என்று கேட்க இன்னைக்கு எனக்கு கல்யாண நாள், அதனால விளக்கு போட வருவதாக சொல்கிறாள்.
பிறகு இருவரும் கோயிலுக்கு சென்று விளக்கு போட்டு சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ரியா மற்றும் ஆனந்த் ஒன்றாக வருவதை பார்க்கிறாள் தீபா. இதைக்கண்டு பதற்றமடைந்த அவள், மீனாட்சி இதைப் பார்த்து விடாமல் தடுத்து, எனக்கு ஒருத்தர சந்திக்க வேண்டிய வேலை இருக்கு… நான் பாத்துட்டு வந்துடுறேன் என சொல்லி, மீனாட்சியை வீட்டுக்கு அனுப்புகிறாள்.
அதன் பிறகு தீபா அவர்களை பின்தொடர்ந்து செல்ல, இருவரும் ரெஜிஸ்டர் ஆஃபீஸ்க்கு செல்வது தெரியவருகிறது. இந்த நிலையில் தீபா கார்த்திக்கு போன் போட, போன் நாட் ரீச்சபிள் என வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? தீபா இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த போவது எப்படி என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்