Karthigai Deepam: ‘தாலியை திருடிய ரம்யா.. கனகச்சிதமாக கண்டுபிடித்த மைதிலி..கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘தாலியை திருடிய ரம்யா.. கனகச்சிதமாக கண்டுபிடித்த மைதிலி..கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘தாலியை திருடிய ரம்யா.. கனகச்சிதமாக கண்டுபிடித்த மைதிலி..கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 23, 2024 12:25 PM IST

Karthigai deepam: அபிராமியும், தீபாவும் கோயிலில் இருந்து நேராக ஜவுளி கடைக்கு வருகின்றனர். அங்கு அவர்கள், மறு தாலி கட்டுவதற்காக தீபாவுக்கு ஒரு பட்டுபுடவையையும், கார்த்திக்கு வேட்டி சட்டையையும் எடுத்து கொண்டு கிளம்பி வருகின்றனர்.- கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘தாலியை திருடிய ரம்யா.. கனகச்சிதமாக கண்டுபிடித்த மைதிலி..கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: ‘தாலியை திருடிய ரம்யா.. கனகச்சிதமாக கண்டுபிடித்த மைதிலி..கார்த்திகை தீபம் அப்டேட்!

தீபா கழுத்தில் மீண்டும் தாலி ஏறாது என்று அதிர்ச்சி கொடுத்த ஜோசியர்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தர்மலிங்கம் ஜோசியரை பார்க்க, அவர் தீபா கழுத்தில் மீண்டும் தாலி ஏறாது என்று சொல்லி அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, அபிராமியும், தீபாவும் கோயிலில் இருந்து நேராக ஜவுளி கடைக்கு வருகின்றனர். அங்கு அவர்கள், மறு தாலி கட்டுவதற்காக தீபாவுக்கு ஒரு பட்டுபுடவையையும், கார்த்திக்கு வேட்டி சட்டையையும் எடுத்து கொண்டு கிளம்பி வருகின்றனர். அடுத்த நாள் காலையில் கார்த்திக், தீபா கழுத்தில் தாலி கட்டுவதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தடப்புடலாக நடக்கிறது. ஆனால், தர்மலிங்கம் பதற்றத்துடனே இருக்கிறார்.

உன் ப்ரண்ட் தானே, நீயே போய் தீபாவை கூட்டிட்டு வா என்று அனுப்பி வைக்கிறாள் ரம்யாவை அனுப்பி வைத்தாள் அபிராமி 

அபிராமி எடுத்து கொடுத்த பட்டு புடவை மற்றும் பட்டு வேட்டி சட்டையை அணிந்து கொண்டு கார்த்தியும், தீபாவும் ஜோடியாக கிளம்பி வருகின்றனர். இந்த நேரத்தில், ரம்யா என்ட்ரி கொடுக்க, எதுவும் தெரியாத அபிராமி, உன் ப்ரண்ட் தானே, நீயே போய் தீபாவை கூட்டிட்டு வா என்று அனுப்பி வைக்கிறாள். 

அதன் பிறகு, ரம்யா, தீபாவை மணமேடைக்கு அழைத்து வர, அய்யர் மாலையை கொடுத்து, இருவரையும் மாற்றி கொள்ள சொல்கிறார்.  அவர் சொன்ன படியே, கார்த்திக் தீபாவுக்கு மாலையை போட, தீபா, கார்த்திக் கழுத்தில் மாலையை போடுகிறாள்.

தாலி காணாமல் போய் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அய்யர், நல்ல முகூர்த்த நேரம்தான் தாலியை கட்டிடலாம் என்று சொல்ல, தாலி காணாமல் போய் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். வீடு முழுக்க தாலியை தேடுகின்றனர், முகூர்த்த நேரம் முடிய போகும் நேரம் வரை தேடியும் தாலி கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், அய்யர் இனிமே தாலி கிடைச்சாலும் கட்ட முடியாது, நல்ல நேரம் முடிந்து விட்டதாக அதிர்ச்சி கொடுக்கிறார். இதை தொடர்ந்து, மைதிலி தாலி எங்க போச்சுனு எனக்கு தெரியும், இந்த ரம்யா கையில் தான் இருக்கு என்று சொல்ல, அவளும் ஆமாம் தாலி என்கிட்ட தான் இருக்கு என்று ஷாக் கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.