Karthigai Deepam: ‘கார்த்தியை கசக்கிய குழப்பம்!.. வழுக்கி விழுந்த ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘கார்த்தியை கசக்கிய குழப்பம்!.. வழுக்கி விழுந்த ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘கார்த்தியை கசக்கிய குழப்பம்!.. வழுக்கி விழுந்த ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 26, 2024 05:42 PM IST

Karthigai Deepam: இது உன்னுடைய பேக் தானே என்று விசாரிக்க, அவன் என்னுடையது இல்ல என்று சொல்லி, வீட்டு கதவை திறந்து என் பேக் இங்க இருக்கு என்று சொல்லி, கன்ஃபியூஸ் செய்கிறான். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘கார்த்தியை கசக்கிய குழப்பம்!.. வழுக்கி விழுந்த ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: ‘கார்த்தியை கசக்கிய குழப்பம்!.. வழுக்கி விழுந்த ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!

சட்டையைப்பிடித்த கார்த்திக் -  அவன் இது என்னுடைய பேக் இல்ல, அந்த சேகர் பேக்காக இருக்கும் என்று சொன்னான். 

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ஐஸ்வர்யா விக் இருந்த பேக்கை கையில் எடுக்க, அதை எல்லாரும் பார்த்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, இந்த பேக் எப்படி வந்தது என்று விசாரிக்கும் போது, அருண், காரில் இருந்தது, நான் தான் கொண்டு வந்தேன் என்று சொல்கிறான். இந்த நிலையில், கார்த்திக் இளையராஜா சட்டையை பிடித்து என்னடா இது… என்று கேட்க, அவன் இது என்னுடைய பேக் இல்ல, அந்த சேகர் பேக்காக இருக்கும் என்று சொல்கிறான்.

கன்ஃபியூஸ் செய்த ராஜா -  எதுவும் செய்ய முடியாமல் அமைதியான கார்த்திக்!

உடனே இரண்டு பேரும் சேகர் வீட்டிற்கு வருகின்றனர். அங்கு வீடு பூட்டி இருக்க, இளையராஜா அந்த சேகர் தான் போலி சாமியாராக இருப்பான் என்று சொல்லிக்கொண்டு திரும்பும் போது, அங்கு சேகர் இருக்கிறான். இது உன்னுடைய பேக் தானே என்று விசாரிக்க, அவன் என்னுடையது இல்ல என்று சொல்லி, வீட்டு கதவை திறந்து என் பேக் இங்க இருக்கு என்று சொல்லி, கன்ஃபியூஸ் செய்கிறான்.

இதற்கிடையே, போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன் செய்து அது நாடக காரர் ஒருவருடைய பேக் என்று சொல்ல, கார்த்திக்கு குழப்பம் அதிகமாகிறது. இருந்தாலும், எதுவும் செய்ய முடியாமல் கார்த்திக் அமைதியாகி விடுகிறான். அடுத்து ரம்யா, கான்ஸ்டபிள் மற்றும் அவருடன் சேர்ந்து நடித்தவனுக்கு பணத்தை கொடுத்து அங்கிருந்து கிளம்பி தீபா வீட்டிற்கு வருகிறாள்.

அடிக்கடி ரம்யா வீட்டிற்கு வருவது தப்பாக இருப்பதாக யோசிக்கும் மைதிலி மற்றும் மீனாட்சி, படிக்கட்டில் சோப் தண்ணியை ஊற்றி ரம்யாவை விழ வைக்க, அவளுக்கு காலில் அடிபடுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.