தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘வசமாக வலை வீசும் ரம்யா.. சைக்கோவாக மாறிய தீபா.. திண்டாடும் கார்த்திக்’ - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘வசமாக வலை வீசும் ரம்யா.. சைக்கோவாக மாறிய தீபா.. திண்டாடும் கார்த்திக்’ - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 01, 2024 02:25 PM IST

Karthigai Deepam: கார்த்திக்கு வந்த சந்தேகம்.. அடுத்தடுத்து வலை வீசும் ரம்யா.. நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: ‘வசமாக வலை வீசும் ரம்யா.. சைக்கோவாக மாறிய தீபா.. திண்டாடும் கார்த்திக்’ -  கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: ‘வசமாக வலை வீசும் ரம்யா.. சைக்கோவாக மாறிய தீபா.. திண்டாடும் கார்த்திக்’ - கார்த்திகை தீபம் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஓடி வந்த கார்த்தி 

தீபா ஜூஸ் குடித்த கொஞ்ச நேரத்தில் பொருட்கள் எல்லாவற்றையும் தள்ளி விட்டு, சைக்கோ போல் நடந்து கொண்டு மயக்கம் போட்டு விழுந்தாள். உடனே கார்த்திக்கு இந்த விஷயத்தை சொல்ல, அவன் ஆபிசில் ரம்யாவிடம் பெர்மிஷன் கேட்டு வீட்டிற்கு வருகிறான். பிறகு தீபாவை ஹாஸ்பிடல் அழைத்து செல்ல, டாக்டர் பயப்படுற மாதிரி எதுவும் இல்ல; மன அழுத்தம் காரணமாக இப்படி ஆகி இருக்கும் என்று சொல்லி அனுப்பினார். அந்த சமயத்தில் மீனாட்சி எதையோ கேட்க வந்தாள். உடனே கார்த்திக் எதுவாக இருந்தாலும், வீட்டிற்க்கு பொய் பேசி கொள்ளலாம் அண்ணி என்று வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.

பிறகு தீபாவிடம் என்னாச்சு என்று கேட்க, அவள் அத்தை ஜூஸ் கொடுத்தாங்க, அதை குடிச்ச பிறகு தான் இப்படி ஆச்சு என்று சொன்னாள். உடனே, தீபா குடித்து வைத்த ஜூஸ் டம்பளரை எடுத்து கொண்டு கிளம்பினான் கார்த்திக். அடுத்த நாள் ரம்யா ஆபிஸூக்கு, அவளை பார்ப்பதற்காக தோழி ஒருவர் வருகிறார்.ஆனால் அங்கு ரம்யா இல்லாத நிலையில், அவளுக்கு போன் செய்து கல்யாண பத்திரிக்கை கொண்டு வந்திருப்பதாக சொல்கிறாள். வீட்டு முகவரியும் தெரியாது என்பதால் ஆபிஸிலேயே அம்மு என்று பெயர் எழுதி பி.ஏ-விடம் கொடுக்க, ரம்யா அதை தனது கேபினில் வைக்கச் சொல்கிறாள்.

அம்மு பெயர் தெரியக்கூடாது

பிறகு கார்த்திக்கு அம்மு என்ற பெயர் தெரிய கூடாது என்று பதறியடித்து ஆபிஸ் ஓடி வருகிறாள். இங்கு கார்த்திக் ரம்யா ரூமுக்குள் செல்ல, கல்யாண பத்திரிகையை பார்த்து விடுவானோ என்ற பில்டப் எகிறுகிறது. அதற்குள் ரம்யா வந்து அந்த பத்திரிகையை மறைத்து விடுகிறாள். அடுத்து ரம்யா கம்பெனிக்கு ஐ.டி ரைடு வருகின்றனர். அதிகாரிகள், கணக்கில் காட்டாத பணம் இருப்பதாக சொல்லி அதனை எடுத்து செல்ல, ரம்யா யார் இப்படி பண்ணது என்று சத்தம் போடுகிறாள்.  

அப்போது ஒருவன், கார்த்திக் தான் ஐ.டி இது அதுனு போன்ல பேசி கொண்டிருந்ததாக சொல்ல, ரம்யா அவர் இப்படி பண்ணி இருக்க மாட்டாரு என்று ரம்யா சப்போர்ட் செய்து பேசுகிறாள். பிறகு அந்த நபர் கார்த்திக்கு தெரிவது போல், ஆனந்துக்கு போன் செய்து, நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிட்டேன் என்று சொல்லி பேச, கார்த்திக் ஆனந்த் தான் இப்படி செய்ய சொன்னதாக புரிந்து கொண்டு, அவனிடம் இது குறித்து கேட்டான். ஆனால், அவன் நான் எதுவும் பண்ணல என்று சொல்கிறான்.

ரம்யா உடன் செல்லும் கார்த்திக்

பிறகு ரம்யா கார்த்தியை கூப்பிட்டு கம்பெனி விஷயமா பெங்களூர் போறேன், நீங்களுடம் கூட வாங்க என்று சொல்லி கூப்பிட, கார்த்திக்கும் ஓகே சொல்கிறான். தொடர்ந்து பி.ஏ-விடம் ரெண்டு பேருக்கும் டிக்கெட் போட சொல்கிறாள். இந்த விஷயம் அறிந்த மாணிக்கம், கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக்கோ.. அப்புறம் இந்த கம்பெனியோட அடுத்த ஓனர் நீ தான் என்று சொல்ல, கார்த்திக் தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிருச்சு என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்