தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: பொறி வைத்து தூக்கிய ஐஸ்வர்யா… ‘தீபா எதிரியாகும் ரம்யா’ - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: பொறி வைத்து தூக்கிய ஐஸ்வர்யா… ‘தீபா எதிரியாகும் ரம்யா’ - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
May 27, 2024 12:19 PM IST

Karthigai deepam: அடுத்த நாள் ரம்யா அபிராமி வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து, எல்லாருக்கும் ஒரு கிஃப்ட் கொடுக்கிறாள். அபிராமி அருணாச்சலம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். ஆனால் வீட்டில் தீபா இல்லை - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: பொறி வைத்து தூக்கிய ஐஸ்வர்யா… ‘தீபா எதிரியாகும் ரம்யா’ - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: பொறி வைத்து தூக்கிய ஐஸ்வர்யா… ‘தீபா எதிரியாகும் ரம்யா’ - கார்த்திகை தீபம் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவுக்கு கார்த்திக் தான் தீபாவின் புருஷன் என்ற உண்மை தெரிய வந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ரூமுக்குள் பயங்கர யோசனையிலும், கோபத்திலும் இருக்கும் ரம்யா, ராமன் சீதை சிலையை தூக்கி போட்டு உடைக்கிறாள். அதனை தொடர்ந்து மறுநாள் காலையில் ஐஸ்வர்யாவை சந்தித்து, இந்த வேலையெல்லாம் செய்தது நீ தான் என்று எனக்கு தெரியும் என்று கோபப்படுகிறாள். இதனையடுத்து ஐஸ்வர்யா, நான் கார்த்தியோட அண்ணிதான், கார்த்தி ஒன்னும் தீபாவை விரும்பி கல்யாணம் பண்ணிக்கல; தீபா அவனை ஏமாற்றிதான் தாலி கட்டிக்கிட்டா என்று தீபாவை பற்றி நெகட்டிவாக சொல்ல, ரம்யாவும் அதனை நம்பி விடுகிறாள்.

மனசாட்சி தோன்றி சொன்ன தீர்ப்பு

இதையடுத்து வீட்டிற்கு வந்த ரம்யா, மீண்டும் யோசனையில் இருக்க, அவளது மனசாட்சி தோன்றி, அவள் செய்வது தப்பு என்று ஒரு பக்கம் சொன்னாலும், இன்னொரு பக்கம் கார்த்திக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல, கடவுள் உனக்கும் கார்த்திக்கும் ஏற்கனவே ஒரு முடிச்சு போட்டு இருக்காரு என்று பேசுகிறது. இதனையடுத்து ரம்யா ஒரு முடிவெடுத்து, உடைந்து போன சிலையில் இருந்த ராமனை மட்டும் தனியாக பிரித்து எடுத்து பார்க்கிறாள்.

அடுத்த நாள் ரம்யா அபிராமி வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து எல்லாருக்கும் ஒரு கிஃப்ட் கொடுக்கிறாள். அபிராமி அருணாச்சலம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். தொடர்ந்து, தீபா எங்கே என்று கேட்க, அவள் மார்க்கெட் போய் இருப்பதாக சொல்லி போனை போட்டு கொடுக்கிறார்கள். தீபா என்ன சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்க, சொல்லி இருந்தா வெயிட் பண்ணி இருப்பேன்ல என்று பேசினாள். அதற்கு ரம்யா இந்த வழியா வந்தேன், அப்படியே பார்த்துட்டு போகலாம்னு வந்ததாக சொல்கிறாள்.

பிறகு மைதிலி எங்க எல்லாருக்கும் கிஃப்ட் கொடுத்துட்ட.. தீபாவுக்கு எங்கே என்று கேட்க, ரம்யா அவளுக்கு பெரிய கிஃப்டா ஸ்பெஷலா இருக்கு என்று சொல்லி விட்டு கிளம்புகிறாள்.இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்று நடந்தது என்ன? 

ரம்யா ஐஸ்வர்யாவின் சதியை மீறி ஆட்டோவில் கிளம்பி வர அவளது அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் என்று ஹாஸ்பிடலில் இருந்து போன் வருகிறது. ஏற்கனவே ஒருமுறை இதே போல் போன் காலில் ஏமாற்றியதால், ரம்யா அதை நம்ப மறுக்க, டாக்டரே போனை வாங்கி உண்மையை சொல்ல, பதறியடித்து ஓடினாள்.  தீபாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி விட, இங்கே கல்யாண நாள் கொண்டாட்டம் நடந்து முடிகிறது. 

அதன் பிறகு தீபாவும் கார்த்தியும் ஹாஸ்பிடலுக்கு வந்தனர். லிப்டில் இருந்து வெளியே வந்த தீபா தவறி விழ போக, கார்த்திக் அவளை தாங்கி பிடிக்க, அதை பார்த்து விடும் ரம்யாவுக்கு கார்த்திக் தான் தீபாவின் புருஷன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ரம்யா அப்பாவிடம் கார்த்திக் குறித்து சொல்ல அவங்க தான் உன்னை முதலில் பொண்ணு பார்க்க வந்தாங்க, அப்போ நீ தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்ட என்று சொன்னாள். இதனால் இரவெல்லாம் தூக்கமின்றி ரம்யா தவித்தாள். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்