Karthigai deepam: தீக்குள் சென்ற புடவை.. ஐஸ்வர்யா செய்த சூழ்ச்சி.. வசமாக சிக்கிய தீபா.. - கார்த்திகை தீபம் அப்டேட்!
அதற்கு தீபா நான் அப்படி சொல்லல அத்தை, அந்த பண்டிகை பற்றி தான் சொன்னேன் என்று புரிய வைக்க முயற்சி செய்கிறாள். அருணாச்சலமும், தீபா ஒன்றும் தப்பா சொல்லலையே என்று சப்போர்ட் செய்து பேசுகிறார்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பெயிண்டர் வராத காரணத்தினால், வீட்டிற்கு நாமளே பெயிண்ட் பண்ணலாம் என்று தீபா ஐடியா கொடுக்க, எல்லாரும் சேர்ந்து பெயிண்ட் அடித்து முடித்தனர்.
இதனையடுத்து தீபாவை அனைவரும் பாராட்டிய நிலையில், அபிராமி டென்ஷன் ஆனார். அடுத்தது என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எல்லாரும் போகி பண்டிகையை கொண்டாட தயாராக அபிராமியும், அருணாச்சலமும் கொளுத்துவதற்கு பழைய துணியை எடுத்தனர்.
அப்போது அருணாச்சலம் கல்யாண புடவையையும் சேர்த்து எடுக்க, அபிராமி அது நம்மோட கல்யாண புடவை, அதை நான் இத்தனை வருஷமா பத்திரமாக வச்சிருக்கேன் என்று வாங்கி உள்ளே வைக்கிறார். இதை ஐஸ்வர்யா பார்த்து விடுகிறாள்.
அடுத்து ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் அந்த கல்யாண புடவையை எடுத்து, தீபா சேகரித்து வைத்துள்ள துணிகளுக்கு அடியில் போட்டு விடுகிறாள்.
பிறகு எல்லாரும் போகியை கொண்டாட ஒன்று சேர, தீபா போகி பண்டிகை அன்று பழைய துணிகளை எரிப்பது போல், நம்ம மனசுல இருக்கிற தீய எண்ணங்களையும் எரித்து விட வேண்டும் என்று சொன்னாள். இதனைக்கேட்ட அபிராமி அப்படியானால் நாங்கள் நல்லவர்கள் இல்லை என்று சொல்கிறாயா? என்று கேட்டாள்.
அதற்கு தீபா நான் அப்படி சொல்லல அத்தை, அந்த பண்டிகை பற்றி தான் சொன்னேன் என்று புரிய வைக்க முயற்சி செய்கிறாள். அருணாச்சலமும், தீபா ஒன்றும் தப்பா சொல்லலையே என்று சப்போர்ட் செய்து பேசுகிறார்.
பிறகு ஆடைகளை எரிக்கத் தொடங்க, அபிராமியின் கல்யாண புடவை உள்ளே கிடப்பதை பார்த்து, அபிராமி தீபாவிடம் நீ வேணும்னு தானே இப்படி பண்ண என்று சண்டையிடுகிறாள். தீபா நீங்க கொடுத்த டிரஸ் தான் எல்லாமே என்று சொல்கிறாள்.
ஆனாலும் அபிராமி அதை புரிந்து கொள்ளாமல் சத்தம் போட அருணாச்சலம் அதை தீபா கொண்டு வரல, இதுல வேற ஏதோ நடந்திருக்கு என்று சொல்லி, தீபாவை காப்பாற்ற தீபா அருணாச்சலத்திற்கு நன்றி சொல்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
டாபிக்ஸ்