தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ரவுடி தொடர்பு; கரெக்டான நேரத்தில் வந்த கார்த்திக் வசமாக சிக்கிய ரம்யா- கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ரவுடி தொடர்பு; கரெக்டான நேரத்தில் வந்த கார்த்திக் வசமாக சிக்கிய ரம்யா- கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 04, 2024 04:22 PM IST

Karthigai Deepam: ரவுடி ரம்யாவுக்கு போன் செய்து, தான் கைதான விஷயத்தை சொல்ல, அவள் அவனை வெளியே எடுக்க ஸ்டேஷனுக்கு கிளம்புகிறாள். மறுபக்கம் கார்த்திக், ஜூஸில் மருந்து கலந்தது யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்று கம்பளைண்ட் கொடுக்க ஸ்டேஷனுக்கு வருகிறான்” - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ரவுடி தொடர்பு; கரெக்டான நேரத்தில் வந்த கார்த்திக் வசமாக சிக்கிய ரம்யா- கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: ரவுடி தொடர்பு; கரெக்டான நேரத்தில் வந்த கார்த்திக் வசமாக சிக்கிய ரம்யா- கார்த்திகை தீபம் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கோயிலுக்கு வந்திருந்த அபிராமியும், மீனாட்சியும் ரம்யா வீட்டிற்கு செல்ல முடிவு செய்திருந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

போலீசில் பிடித்துக்கொடுத்த தீபா

அதாவது, தீபாவை கொல்ல வந்த ரவுடி கோயில் அருகே போன் பேசி கொண்டே நடந்து வர, எதிரில் மீனாட்சியும் போனில் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் இருவரும் மோதி கொள்கின்றனர். இதையடுத்து மீனாட்சிக்கும், ரவுடிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டை முற்றிய நிலையில், ஒரு கட்டத்தில் போலீசை கூப்பிட்டு அவனை பிடித்து கொடுக்கின்றனர்.

அதன் பிறகு, அந்த ரவுடி ரம்யாவுக்கு போன் செய்து, தான் கைதான விஷயத்தை சொல்ல, அவள் அவனை வெளியே எடுக்க ஸ்டேஷனுக்கு கிளம்புகிறாள். மறுபக்கம் கார்த்திக், ஜூஸில் மருந்து கலந்தது யார் என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்று கம்பளைண்ட் கொடுக்க ஸ்டேஷனுக்கு வருகிறான். 

அப்போது கார்த்தியின் நண்பரான இன்ஸ்பெக்டர் உங்க அண்ணி கிட்ட ஒருத்தன் தப்பா நடந்துக்கிட்டானு கைது பண்ணி இருக்கோம். அவனை விசாரிக்கும் போது அவன் கிட்ட கத்தி இருந்தது. தீபாவை குத்த வந்தது இவனா பாரு என்று காட்ட கார்த்திக், இவன் தான் என்று அடையாளம் காட்டுகிறான்.

கார்த்தியிடம் சிக்கிய ரம்யா: 

அதன் பிறகு ரம்யாவும் ஸ்டேஷனுக்கு வர கார்திக்கியிடம் சிக்கி கொள்கிறாள். எதுக்கு இங்க வந்தீங்க என்று விசாரிக்க, ரம்யா ஒருத்தன் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்பதாக கம்பளைண்ட் கொடுக்க வந்ததாக சொல்கிறாள். பிறகு இன்ஸ்பெக்டர் இவனா பாருங்க என்று காட்ட, ரம்யாவும் ஆமாம் என்று தலையாட்டி அங்கிருந்து கிளம்பி வருகிறாள். அதை தொடர்ந்து அபிராமியும் மீனாட்சியும் வீட்டிற்கு வர ரம்யா அவர்களை வரவேற்கிறாள்.

பிறகு அப்பாவிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்து வைக்க, அவர் கார்த்திக்கு முதல் முதலாக என் பொண்ணை தான் பொண்ணு பார்க்க வந்தீங்க என்று சொன்னார். இதைக்கேட்ட அபிராமி ஷாக் ஆகிறாள். இதையடுத்து ரம்யா அப்பா சொன்னதை மனசுல வச்சிக்காதீங்க, கார்த்திக்கிற்கும், தீபாவிற்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்றும் சொல்கிறாள். 

அபிராமியும் மீனாட்சியும் கோயிலில் இருந்து கொண்டு வந்த சாமி புடவையை இங்கேயே மறந்து வைத்து விட்டு கிளம்பி விட, ரம்யா அந்த புடவையை எடுத்து வைத்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்