தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Serial Karthigai Deepam Latest Episode Today Update

Karthigai Deepam: 2 -வதாக ரியாவை திருமணம் செய்த ஆனந்த்..கோபத்தில் கொந்தளித்த மீனாட்சி.. காற்றில் பறந்த தாலி!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 22, 2024 04:49 PM IST

ரியாவுடன் வந்து நின்ற ஆனந்த்.. செவிலில் அறைந்த அபிராமி, மீனாட்சி எடுத்த முடிவு - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், மீனாட்சி கல்யாண நாளை கொண்டாட எல்லாம் ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்க, கேக் கட் பண்ணும் நேரத்தில் ஆனந்த் ரியாவை உள்ளே அழைத்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

ஆனந்த் ரியாவை கூப்பிட்டு நானும்  இவளும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்ற உண்மையை உடைக்கிறான். இதைக்கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து உச்சக்கட்ட டென்ஷனான அபிராமி ஆனந்தை பிடித்து, உன்னையே நம்பி இருக்கவனுக்கு எப்படி துரோகம் பண்ண என பளார் பளார் என அறைகிறாள்.

ஆனந்த் எனக்கு ஆரம்பத்தில் இருந்து மீனாட்சி சுத்தமா பிடிக்கல நீங்கதான் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சீங்க. காலேஜ் படிக்கும் போதிலிருந்தே, நானும் ரியாவும் காதலிச்சோம். நீங்க கட்டாய படுத்தவேதான் குழந்தையும் பெத்துக்கிட்டோம். இந்த விஷயத்துல என்ன கேள்வி கேட்க உங்க யாருக்கும் தகுதியும் கிடையாது; உரிமையை கிடையாது. மீனாட்சி தான் பேசணும், அவ பேசட்டும்; நான் அவகிட்ட பேசிக்கிறேன் என ஆனந்த் பதிலடி தருகிறான்.

இதையெல்லாம் கேட்டு மீனாட்சி அப்படியே உடைந்து போய் படிக்கட்டில் உட்காருகிறாள். ஆனந்த் அவளிடம் பேச போக, கோபத்தில் கொந்தளிக்கும் மீனாட்சி, ஒரு கட்டத்தில் கழுத்தில் இருக்கும் தாலியை கழட்டி ஆனந்த் முகத்தில் வீசி எறிகிறாள். இப்படியான நிலையில், அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

கார்த்திக் மற்றும் தீபா இருவரும் ஆனந்த் மற்றும் ரியாவை தேடி கோயில் கோயிலாக அலைய, ஒரு கோயிலுக்குள் ஆனந்த் ரியா கழுத்தில் தாலி கட்டி நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு கார்த்திக் ஆனந்தை சந்தித்து சத்தம் போட ,அவன் உன் பொண்டாட்டி மட்டும் என்ன ஒழுக்கமா பொய் சொல்லி தானே உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என தீபாவை வம்புக்கு இழுக்கிறான்.

அதற்கு கார்த்தி அப்ப எனக்கு கல்யாணம் ஆகல… ஆனா உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு, உன்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கா என சொல்கிறான்

ஆனந்த் எனக்கு ரியாவை ரொம்ப பிடிச்சிருக்கு; ரொம்ப நாளா நாங்க காதல் பண்ணிக்கிட்டு இருக்கோம்; நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழ போறம் என்று சொல்ல,கார்த்திக் எவ்வளவு எடுத்து சொல்லியும், ஆனந்த் அவனது முடிவில் உறுதியாக இருக்கிறான். இதனையடுத்து வேறு வழியில்லாமல் கார்த்திக்கும் தீபாவும் அங்கிருந்து கிளம்பி வருகின்றனர்.

பிறகு ஆனந்தும் நாம வீட்டுக்கு போய் கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லிடலாம் என்று சொல்லி, ரியாவை கூட்டிக்கொண்டு கிளம்பி வருகிறான். முதலில் கார்த்திக் தீபா வீட்டுக்கு வர மீனாட்சி கல்யாண நாளை கொண்டாடுவதற்காக வீட்டையே டெக்ரேட் செய்து, ஆனந்திற்காக காத்திருப்பதை பார்த்து வருத்தப்படுகின்றனர்.

வீட்டில் உள்ளவர்கள் என்ன விசேஷம், எதுக்கு டெக்கரேஷன் என கேட்க, மீனாட்சி கல்யாண நாள் என சொல்லி ஆனந்த் வந்ததும் கேக் வெட்டலாம் என்று கூறினாள். இதனையடுத்து அபிராமி உட்பட எல்லோருமே அதுக்கு என்ன சந்தோஷமா செய்யலாம் என்று சொல்கின்றனர்.

இந்த நேரம் பார்த்து ரியாவுடன் வீட்டுக்கு வரும் ஆனந்த், அவளை காரிலேயே உட்கார வைத்துவிட்டு உள்ளே வருகிறான். இதனையடுத்து மீனாட்சி… வாங்க உங்களுக்காகத்தான் எல்லா டெக்கரேஷனும் பண்ணி இருக்கேன் என்று சந்தோஷமாக வரவேற்கிறாள். இதைப் பார்த்ததும் ஆனந்த் இவளுக்கு உண்மை எதுவும் தெரியல போல என புரிந்து கொண்டு நேரம் பார்த்து சொல்லலாம் என காத்திருக்கிறான்.

பிறகு கேக் வெட்ட தயாராக, அபிராமி உனக்காக இவ்வளவு செஞ்சு இருக்கா… ஆனா நீ என்ன பெங்களூரில் இருக்க… சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வாடா என செல்லமாக திட்டுகிறார். ஆனந்த் கேக் கட் பண்ணாமல் எனக்கு வேண்டாம் என சொல்லி ரியாவை வீட்டுக்குள் அழைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைகாட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்