தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: சதியில் ஈடுபட்ட அருண்.. ஒற்றை ஆளாக நின்று மாஸ் காட்டிய கார்த்திக் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Karthigai Deepam: சதியில் ஈடுபட்ட அருண்.. ஒற்றை ஆளாக நின்று மாஸ் காட்டிய கார்த்திக் - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 15, 2024 04:12 PM IST

தொழிலாளியாக மில்லுக்கு வந்த கார்த்திக்.. முதல் நாளே நடந்த தரமான சம்பவம் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

ஐஸ்வர்யா மற்றும் ரியா கூட்டு சதி: 

ஐஸ்வர்யா மற்றும் ரியா கூட்டு சேர்ந்து கார்த்தியை எப்படியாவது இந்த சவாலில் தோற்கடித்து, சொத்தை பிரிக்க வேண்டும் என பிளான் போடுகின்றனர். மறுபக்கம் மீனாட்சி, ஆனந்த் மீது பயங்கர கோபத்தில் இருந்தாள். இதனையடுத்து அங்கு வந்த தீபா, அவளை கூல் செய்து, கார்த்திக் சார் எடுத்த முடிவை பற்றி சொல்கிறாள். 

ஒரு மாசம் மில்லில் வேலை

பிறகு கார்த்திக் அங்கு வந்து, தான் ஒரு மாசம் மில்லில் வேலை பார்க்கப் போற விஷயத்தை சொல்ல, தீபா நீங்க எடுத்தது நல்ல முடிவு சார். ஆனால் அதே சமயம் அண்ணன், தம்பி உள்ளுக்குள்ள பிரிவும் வரக்கூடாது. சொத்தும் பிரிய கூடாது என தீபா சொல்லிக் கொண்டிருக்க, அபிராமி பூஜை தட்டுடன் அங்கு வந்தாள். 

சொத்தும் பிரிய கூடாது

அவளும் கார்த்திக்கிடம், நீ எடுத்தது நல்ல முடிவு; தீபா சொன்னா மாதிரி, நீங்க எல்லோரும் ஒன்னா இருக்கணும்; இந்த சொத்தும் பிரிய கூடாது என சொல்கிறாள்;மேலும், கார்த்திக் கையில் ஒரு சாமி கயிற்றை கட்டிவிட்டு, இது உனக்கு துணையா இருக்கும் என சொல்கிறாள்.

இன்ஜினியருக்கு போன் போட்டு யார் போன் செய்து கூப்பிட்டாலும் வரக்கூடாது என்ற ஆனந்த்!

அடுத்ததாக ஆனந்த் மில்லுக்கு வர, மேனேஜர் இரண்டு மணி நேரமா மிஷின் போடல, அதனால நாலு லட்சம் ரூபாய் லாஸ் என சொல்கிறார்.  தொடர்ந்து மேடம் இன்ஜினியரை வரச் சொல்லி இருப்பதாக சொல்ல, தனியாக செல்லும் ஆனந்த், இன்ஜினியருக்கு போன் போட்டு யார் போன் செய்து கூப்பிட்டாலும் வரக்கூடாது என சொல்லியதோடு, கார்த்தி வந்த முதல் நாளே லாஸ் ஆன மாதிரி இருக்கணும் என பிளான் போடுகிறான்.

களத்தில் இறங்கிய மாஸ் காட்டிய கார்த்தி!

இந்த நிலையில், மில்லுக்கு கார்த்திக் வர, மிஷின் ஓடாத விஷயம் அறிந்து, அவனே மெஷினை ரிப்பேர் செய்கிறான். இதற்கிடையே திடீரென மிஷின் ஓடும் சத்தம் கேட்டு,  அருண், ஆனந்த் வெளியே வர மிஷினை ரெடி பண்ணது கார்த்திக் தான் என தெரிந்து ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்!

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்