தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Serial Karthigai Deepam Episode Latest Update

Karthigai Deepam: தீபாவிற்காக சவால் விட்ட கார்த்திக்.. சிக்க போகும் ஐஸ்வர்யா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 11, 2024 12:40 PM IST

அவர் உடம்பு சரியில்லாமல் போனதற்கு நான் எப்படி காரணமாக முடியும் என கேட்டதோடு, எதை வச்சு நான் தான் நியூஸ் பேப்பர்ல செய்தி போட சொன்னேன்னு சொல்றீங்க ..ஆதாரம் இல்லாம பேசாதீங்க என்று சாடினாள். இதைக்கேட்ட கார்த்திக், செய்தி போடச் சொன்னது நீங்க தானே நான் நிரூபித்து காட்டுறேன் என சவால் விடுகிறான்.

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் தீபாவை ஹாஸ்பிடலில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்த கார்த்திக்கு எல்லோரிடமும் தர்ம லிங்கத்துக்கு ஹார்ட் அட்டாக் வந்ததைச் சொல்கிறான். இதுக்கு காரணம் நம்ம வீடும் தான் என்றும்  சொல்ல, எல்லோரும் குழப்பம் அடைகின்றனர்.

மேற்கொண்டு பேசிய கார்த்திக், ராஜேஸ்வரிதான் பேப்பரில் தீபா பற்றிய தவறான செய்தியை போட சொன்னது என்று சொன்னது மட்டுமல்லாமல், அவங்கதான் சீர்வரிசை கேட்டு தர்மலிங்க மாமாவ அவமானப்படுத்தினாங்க, அதனால்தான் அவர் சிகிச்சைக்காக வைத்திருந்த பணத்தில் சீர் செய்துள்ளார் என்ற உண்மையை உடைக்கிறான்.

இதையெல்லாம் கேட்ட ராஜேஸ்வரி, அவர் உடம்பு சரியில்லாமல் போனதற்கு நான் எப்படி காரணமாக முடியும் என கேட்டதோடு, எதை வச்சு நான் தான் நியூஸ் பேப்பர்ல செய்தி போட சொன்னேன்னு சொல்றீங்க ..ஆதாரம் இல்லாம பேசாதீங்க என்று சாடினாள். இதைக்கேட்ட கார்த்திக், செய்தி போடச் சொன்னது நீங்க தானே நான் நிரூபித்து காட்டுறேன் என சவால் விடுகிறான்.

இதையடுத்து கார்த்திக் என்ன செய்யப் போறான் என ராஜேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யா குழப்பத்தில் இருக்க, கார்த்திக் நியூ எடிட்டர் ரவி வீட்டுக்கு வருகிறான். அங்கு வந்து வீட்டில் நடந்த விஷயங்களை சொல்லி, நீங்க வந்து உண்மையை சொல்லணும் என்று கூப்பிட, ரவி எனக்கு எதுவும் பிரச்சனை வராதா என்று பயப்படுகிறான்.

ரவியின் மனைவி நீங்க செய்த தவற நீங்கதான் சரி செய்யணும் ஒரு பெண்ணோட வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்று அட்வைஸ் செய்ய, அவர்  உண்மையைச் சொல்ல ஒப்புக்கொள்கிறான். மறுபக்கம், வீட்டில் என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் எல்லோரும் காத்திருக்கின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

நேற்று நடந்தது என்ன? 

கார்த்திக் தீபாவை ஸ்டுடியோவிற்கு அழைத்து வந்து விட இசையமைப்பாளர் ரக்ஷன் பாடலை கொடுத்து, இது தான் நீங்க பாட வேண்டியது என்று சொல்ல, தீபா அது அப்பா பாடலாக இருப்பதை பார்த்து எமோஷனலாகிறாள். உடனே அப்பா கிட்ட பேசணும் என்று ஏங்குகிறாள்.

இதனையடுத்து ஜானகிக்கு போன் செய்ய, அவர் அப்பா முருகன் கோயிலுக்கு போய் இருக்கார் என்று பொய் சொல்லி, போனை வைக்கிறார். 

ஹாஸ்பிடலில் டாக்டர்கள் தர்மலிங்கத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக சொல்கின்றனர். கார்த்திக் ஹாஸ்பிடல் பார்மில் கையெழுத்து போட்டு கொடுக்கிறான்.

மறுபக்கம் கோகிலா தீபாவுக்கு தர்மலிங்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்லி,அவள் பாடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிளான் போட்டு ஸ்டூடியோவிற்கு கிளம்பி வர அவளை உள்ளே விட மறுக்கின்றனர்.  தீபா எந்தவொரு தடங்கலும் இல்லாமல் பாடி முடிக்கிறாள். ரக்ஷன் பாடியதற்கான பணத்தை செக்காக கொடுக்க, தீபா மிகுந்த சந்தோசம் அடைகிறாள்.

இதை உடனே அப்பா கிட்ட கொடுக்க வேண்டும் என்று கிளம்ப, கார்த்திக் அவளை பிக்கப் செய்து அழைத்துச் செல்கிறான். போகும் வழியில் தீபா காரை நிறுத்த சொல்லி அப்பாவுக்கு பிடித்தவற்றை வாங்க, கார்த்திக் தர்மலிங்கம் ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்கிறான். இதைக்கேட்ட தீபா உடைந்து போகிறாள். இதையடுத்து கண்ணீருடன் அப்பாவை பார்க்க ஹாஸ்பிடலுக்குள் ஓடி வந்தாள். 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்