தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Serial Karthigai Deebam Today Episode Update

Karthigai Deebam: ரியா குறித்து வெளிவந்த உண்மைகள்.. கார்த்திக் போடும் ஸ்கெட்ச் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kalyani Pandiyan S HT Tamil
Mar 14, 2024 03:48 PM IST

ரியா காசை நல்லா செலவு பண்ணி ஊர சுத்தணும்னு நினைக்கிறவ; ஆனா நான் சாதாரண வேலை செய்கிறவன். அவளுடைய ஆசைகளை என்னால நிறைவேற்ற முடியல, அதனால ரெண்டு பேரும் பேசி விவாகரத்து வாங்கிக்கிட்டோம் என்று சொல்கிறார்.

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் அபிராமியால் ராஜேஸ்வரி போலீஸிடம் இருந்து தப்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஆபீஸ் வரும் கார்த்திக் தீபாவின் பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதை அப்படியே விட்டுவிடக்கூடாது இன்னும் நிறைய கவனம் செலுத்தணும் என்று பிஏவிடம் சொல்கிறான்.

அதைத்தொடர்ந்து கார்த்திக் வந்து கொண்டிருக்கும் போது வழியில் மது என்பவரை பார்க்க, அவர் ரியாவின் உண்மையான கணவர் என்பதும் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்ற விஷயமும் தெரிய வருகிறது.

ரியா காசை நல்லா செலவு பண்ணி ஊர சுத்தணும்னு நினைக்கிறவ; ஆனா நான் சாதாரண வேலை செய்கிறவன். அவளுடைய ஆசைகளை என்னால நிறைவேற்ற முடியல, அதனால ரெண்டு பேரும் பேசி விவாகரத்து வாங்கிக்கிட்டோம் என்று சொல்கிறார். 

இதனையடுத்து கார்த்திக், ரியா என் அண்ணனோட தான் சுத்திக்கிட்டு இருக்கா எனக்கு உங்களோட உதவி தேவை என்று கேட்க, அவர்கள் கண்டிப்பாக உதவுகிறேன் என சொல்கிறார்.

பிறகு கார்த்திக் அங்கிருந்து கிளம்பும்போது ஒரு நல்ல குரலில் பாட்டு கேட்க, திரும்பிப் பார்க்கிறான். 

அங்கு துப்புரவு பணியாளர் பெண் ஒருவர் பாடுவதை கேட்டு கைதட்டி உற்சாகப்படுத்துகிறான்.

நீங்க நல்லா பாடுவீங்களா? கச்சேரியில பாட ஆசை இருக்கா? உங்களுக்கு நான் வாய்ப்பு தரேன் என ஆபிஸ் விசிட்டிங் கார்டை கொடுத்து தன்னை வந்து ஆபீஸில் சந்திக்குமாறு சொல்கிறான்.

ஆபீஸுக்கும் போன் போட்டு ராணி என்றவங்க வந்து பாப்பாங்க; அவங்கள வச்சு கச்சேரி பண்ணனும் என்று விஷயத்தை சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம் நேற்று நடந்தது என்ன?

ஒரு பக்கம் ராஜேஸ்வரி எடிட்டரை தூக்கிவிட, கார்த்திக் ஒரு வழியாக அவனை கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டுவந்து நிறுத்துகிறான். ஆனால் ராஜேஸ்வரி இவர் யார் என்று எனக்குத் தெரியாது என்று ட்ராமா போடுகிறாள்.  

இந்த நிலையில் எடிட்டர் ரவி ராஜேஸ்வரி தான் தீபாவும் ரக்ஷனும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை அனுப்பி நியூஸ் போட சொன்னது என்ற உண்மையை ஆதாரத்துடன் நிரூபிக்கிறான்.

இதனால் அபிராமி அதிர்ச்சி அடைந்து ஒரு பொண்ணோட வாழ்க்கையில இப்படி விளையாடி இருக்கீங்களே, இந்த வீட்டு சம்மந்தியா இருந்துட்டு, நீங்க இப்படி செய்யலாமா என்ற கேள்வி கேட்க, ஆளாளுக்கு ராஜேஸ்வரியை பிடித்து திட்டித் தீர்க்கின்றனர்.

கடைசியாக ராஜேஸ்வரி தப்பை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்க கார்த்திக் அவர்களே உண்மையை ஒத்துக்கிட்டாங்க என்று கூறி… கூட்டிட்டு போங்க என்று போலீசை கூப்பிட்டு, ராஜேஸ்வரியை கைது செய்ய சொல்கிறான். இதற்கிடையே வந்த அபிராமி ஐஸ்வர்யா கர்ப்பமாக இருக்கிறார். இந்த நேரத்தில் இவங்கள கைது பண்ணா அது நல்லா இருக்காது என சொல்லி ராஜேஸ்வரியை காப்பாற்றுகிறார்.

கார்த்திக் தர்மலிங்க மாமாவுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு வேண்டிக்குங்க அவருக்கு ஏதாவது ஆச்சு… உங்களை சும்மா விடமாட்டேன் என வார்னிங் கொடுத்து விட, இன்ஸ்பெக்டர் எனக்கு இதுல உடன்பாடு இல்லை கார்த்திக் நீங்க சொல்றதுனால அவங்கள விட்டுட்டு போறேன் என கிளம்பி செல்கிறார்.

பிறகு அருண் ராஜேஸ்வரி ரூமுக்கு வந்ததன்  பின்னால், ஏன் இப்படி எல்லாம் பண்ணி ஒவ்வொரு முறையும் கார்த்திக் கிட்ட அவமானப்பட்டு நிற்கிறீங்க.. ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதினால் தான் நீங்க தப்பிச்சீங்க இல்லனா உங்க கதி என்னவாகி இருக்கும் என திட்டுகிறான்.

அடுத்து தீபா கார்த்திக்கு போன் செய்து நான் இன்னிக்கி ஹாஸ்பிடல் தங்கிடுறேன். நாளைக்கு வரும்போது எனக்கு ஒரு படம் மட்டும் எடுத்துட்டு வாங்க என்று சொல்,  கார்த்திக் கபோர்டை திறந்து பார்க்கிறான். 

அதில் அவனது கல்யாண பத்திரிக்கையில் நட்சத்திராவின் பெயரை அழித்துவிட்டு, தீபா என எழுதி இருப்பதை பார்த்து மீனாட்சியிடம் என்ன விஷயம் என்று கேட்கிறான். கல்யாணத்துக்கு முன்னாடி தீபாவுக்கு உங்க மேல காதல் இருந்தது ஆனா அவ தான் அதை வெளியில் சொல்லல என்ற உண்மையை உடைக்கிறாள்.

அதுமட்டுமின்றி பெங்களூர் போயிருந்தபோது, கோயிலில் தாலி வந்து தீபாவின் கழுத்தில் விழுந்த விஷயத்தையும் சொல்கிறாள். இதனால் கார்த்திக்கு தீபாவின் காதல் குறித்த விஷயம் தெரிய வருகிறது. 

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்