தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Serial Karthigai Deebam Today Episode Update

Karthigai Deebam: உயிரை காப்பாற்றிய தீபா.. உணர்ச்சி வசப்பட்ட கார்த்திக்!.. தவிடு பொடியான சிதம்பரம் பிளான்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 12, 2024 03:44 PM IST

பல்லவி பற்றி தெரிய வந்த உண்மை.. அம்பலமான சிதம்பரத்தின் பிளான் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்; இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சவுண்ட் எஞ்சினியர் உண்மைகளை சொல்ல கார்த்திக்கை பார்க்க வந்திருந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்!

சவுண்ட் எஞ்சினியர் கார்த்திக்கிடம், சிதம்பரம் நீங்கள் படகு போட்டியில் கலந்து கொண்ட போது உங்களுக்கு பின்னால் துப்பாக்கியுடன் ஆட்களை இறக்கி உங்களை கொன்று விடுவேன் என்று பல்லவியை மிரட்டி பாட வைத்தார் என்ற உண்மையை சொல்கிறார்.

இதைக்கேட்ட கார்த்திக் அதிர்ச்சி அடைகிறான். தொடர்ந்து, பல்லவி மீது தப்பில்லை என்பதையும் உணர்கிறான்.

அதனை தொடர்ந்து, தீபாவை வைத்து காபி கொடுத்து, இவர்தான் தன்னுடைய மனைவி என கார்த்திக் அறிமுகப்படுத்த, சவுண்ட் எஞ்சினியர் ஷாக் ஆகிறார்.

ஆனால் இதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதால் தீபா தான் பல்லவி என்ற விஷத்தை மறைத்து விடுகிறார்.

கார்த்திக் அவரிடம் நீங்கள் பல்லவியை பார்த்திருக்கீர்களா என்று கேட்க, அவர் தீபா மாதிரியே தான் இருப்பாங்க என்று சொல்லி கிளம்புகிறார் 

இதனையடுத்து அவர் பின்னாடியே சென்ற தீபா, நல்ல வேளை நீங்கள் உண்மையை சொல்லவில்லை என்று நன்றி சொல்கிறாள்.

பிறகு கார்த்திக், பல்லவிக்கு போன் செய்து நான் உங்களை தவறாக நினைத்து விட்டேன்.  

நீங்கள் என் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை, ஆனால் என்னை காப்பாற்றி இருக்கிறீர்கள், நன்றி; என்று சொல்லி போனை வைக்க, தீபா சந்தோஷமடைகிறாள். 

பிறகு இந்த விஷயத்தை மீனாட்சியிடம் சொல்லி ஆனந்தம் கொள்கிறாள் தீபா.

அடுத்தாக வடநாட்டு கம்பெனி மீட்டிங் தொடங்க, சிதம்பரம் அந்த கார்த்திக் எல்லாம் வர வாய்ப்பே இல்லை என்று சொல்லி கொண்டிருக்க்கிறார் 

இதற்கிடையே மாஸ் என்ட்ரி கொடுக்கிறான் கார்த்திக். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.