தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Serial Karthigai Deebam Serial Today Episode Update

Karthigai Deebam: இரு பக்க வலை.. உண்மையை மறைத்த கார்த்திக்.. சிக்குவாளா தீபா? - பரபரக்கும் கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 24, 2024 01:51 PM IST

உண்மையை மறைக்கும் கார்த்திக், சிக்குவாளா தீபா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா மீனாட்சியிடம் ரூபஸ்ரீக்காக பாட போகும் விஷயத்தை சொல்ல, அவள் வேண்டாம் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என எச்சரிக்கை கொடுக்கிறாள்.

அதற்கு தீபா இந்த ஒரு முறை மட்டும் பாடி கொடுக்க போவதாக சொல்ல, கார்த்திக் அங்கு வந்து விடுகிறான். இதனையடுத்து பேச்சை மாற்றி மழுப்பி விடுகின்றனர்.

இன்னொரு பக்கம் ரூபஸ்ரீ, கோகிலா சிக்கி கொண்டதை நினைத்து உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறாள். 

மறுபக்கம் கோகிலா ரவுடி களிடம் இருந்து தப்பிக்க ப்ளான் போட்டு, பாத்ரூம் போகணும், கட்டை அவிழ்த்து விடுங்கடா என சொல்ல, ரவுடிகள் முடியாது என மறுக்கின்றனர்.அடுத்ததாக தீபா, சாமி முன்னால் நின்று இந்த ஒருமுறை கார்த்திக்கு தெரியாமல் பாட போறேன், இந்த முறை மட்டும் அவர் கண்ணுல படாமல் காப்பாற்றி விடு…பாடி முடிச்சதும் உண்மையை சொல்லி விடுகிறேன் என வேண்டுகிறாள்.

அங்கு வரும் கார்த்திக் முக்கியமான விஷயம் காரணமாக வெளியே செல்வதாக சொல்ல, தீபா பூஜை செய்து ஆரத்தி காட்டி அனுப்பி வைக்கிறாள். கார்த்திக், தீபாவிடம் பல்லவியை கண்டுபிடிக்க செல்லும் விஷயத்தை மறைத்து வெளியே கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.