Karthigai Deebam: உச்சக்கட்ட ஆபத்தில் தீபா.. கண்ணீர் கலக்கத்தில் கார்த்திக்..கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deebam: உச்சக்கட்ட ஆபத்தில் தீபா.. கண்ணீர் கலக்கத்தில் கார்த்திக்..கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deebam: உச்சக்கட்ட ஆபத்தில் தீபா.. கண்ணீர் கலக்கத்தில் கார்த்திக்..கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 08, 2024 01:57 PM IST

Karthigai Deebam: மறுபக்கம் கார்த்திக், இளையராஜா ஆகியோர் தீபாவை தேடி அலைய, இளையராஜா, தீபா வாய்ஸ் மெசேஜ் செய்திருப்பதை கவனித்து, கார்த்திக்கிடம் சொல்கிறான் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deebam: உச்சக்கட்ட ஆபத்தில் தீபா.. கலக்கத்தில் கார்த்திக்..கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deebam: உச்சக்கட்ட ஆபத்தில் தீபா.. கலக்கத்தில் கார்த்திக்..கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து, தீபா குறித்து விசாரித்தான். இதனையடுத்து, அவள் காரில் இருந்து வெளியே இறங்கி வந்து பேசிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

வாய்ஸ் மேசேஜ் அனுப்பிய தீபா!

அதாவது, ரம்யா கார்த்திக்கை சமாளித்து விட்டு, மீண்டும் காருக்குள் சென்று ஏறினாள். அப்போது தீபா, என்னுடைய புருஷனா போன் பண்ணாரு என்று கேட்க, ரம்யா இல்லை என்று சமாளிக்கிறாள். மறுபக்கம் கார்த்திக், இளையராஜா ஆகியோர் தீபாவை தேடி அலைய, இளையராஜா, தீபா வாய்ஸ் மெசேஜ் செய்திருப்பதை கவனித்து, கார்த்திக்கிடம் சொல்கிறான். 

உடனே கார்த்திக், அந்த வாய்ஸ் மெசேஜை கேட்கிறான். அதில், அபிராமிக்கு குணமாகவதற்காக தான் பரிகாரம் செய்ய போவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், அதுக்கு முழுக்க முழுக்க தான்னே பொறுப்பு என்று பேசி இருப்பதை கேட்டதும் ஷாக் ஆகிறான். 

பதற்றத்தில் தீபா

இது தீபாவாக பேசுன மாதிரி தெரியல, யாரோ இப்படி பேச வச்சிருக்காங்க என்று சந்தேகப்படும் கார்த்திக் கூடிய சீக்கிரமா தீபாவை கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லி தனது போலிஸ் நண்பருக்கு போன் செய்து, வாய்ஸ் மெசேஜ் எந் டவரில் இருந்து வந்து இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கச் சொல்கிறான். 

மறுபக்கம், தீபாவும் ரம்யாவும் பரிகாரம் செய்யும் இடத்திற்கு வந்திருக்க, போலி சாமியார் தீபாவை தண்ணீரில் மிதக்க விடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்து பூஜைகளை செய்கிறான். தீபா, கார்த்திக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருப்பதால் பதற்றம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

 

ரியா சாமியார் வேடத்தில் இருக்க, அங்கு வந்த ஐஸ்வர்யா, நீ சூப்பர் வேலை பண்ண, தீபாவை தூக்கின மாதிரி அடுத்து மீனாட்சியை தூக்கி காலி பண்ணு.. அப்படியே ஒவ்வொருத்தரா தீர்த்து கட்டிடு, என் புருஷனை மட்டும் விட்டுடு என்று சொல்ல, ரியா நான் எல்லாரையும் கொன்னுட்டு ஜெயிலுக்கு போகணும், நீ இங்க சொகுசா வாழணுமா என்று கேட்டு ஷாக் கொடுத்தாள். 

இதனையடுத்து தீபாவை நான் கடத்தல என்று சொன்ன உடன் ஐஸ்வர்யா, யாரோ ஒரு சாமியாரை நம்பிதான் தீபா போய் இருக்கா என்ற விஷயத்தை சொல்ல, ரியா சந்தோசப்பட்டாள். இன்னொரு பக்கம், காட்டம்மன் கோயிலில் சாமியார் தீபா கையை பிடித்து மந்திரத்தை சொன்னதும், அவளுக்குள் ஏதோ ஒரு எனர்ஜி உருவானது போல் பீல் செய்தாள். 

ரம்யாவிற்கு சென்ற போன் 

மறுபக்கம் கார்த்திக், மைதிலிக்கு போன் செய்து, தீபா குறித்து விசாரிக்க, செங்கல்பட்டு பக்கத்தில் இருக்கும் சாமியாரை பார்க்க போய் இருக்கா, ஆனால் பரிகாரம் பத்தி எனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னாள். உடனே, கார்த்திக் இளையராஜாவிடம் செங்கல்பட்டு சாமியார் குறித்து கேட்க, எனக்கு அங்க இருக்க முனீஸ்வரன் கோயில் பூசாரி ஒருத்தரை தெரியும். அவரை போய் பார்த்தா, நமக்கு தகவல் கிடைக்கும் என்று சொன்னான். இதையடுத்து கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்ய, காரில் தீபாவுடன் இருக்கும், அவள் வாந்தி வருவதாக சொல்லி வெளியே வந்து போனை அட்டென்ட் செய்து பேசினாள். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

https://www.whatsapp.com/channel/0029Va9NEUA7IUYU4eBTc81v

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.