தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Serial Karthigai Deebam Serial Latest Episode Update

Karthigai Deebam: அவமானப்பட போகும் அபிராமி..ஐஸ்வர்யா செய்த சதி.. கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 03, 2024 02:07 PM IST

கல்யாணத்தில் அவமானப்பட போகும் அபிராமி.. ஐஸ்வர்யா செய்த சதி - கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

தீபாவும் கார்த்திக்கும் ரெஸ்ட்டாரெண்ட் சென்றிருக்க, அப்போது தீபா, கார்த்திக்கு தெரியாமல் கூல்ரிங்க்ஸை மாற்றி வைக்கிறாள். இதனையடுத்து கார்த்திக் தீபாவிடம் கூல் ட்ரிங்க்ஸ் ரொம்ப டேஸ்ட்டாக இருக்குல்ல என கேட்க, தீபா எதுவும் தெரியாதது போல ஆமாம் எனக்கும் அப்படி தான் இருக்கு என சொல்கிறாள் இதையடுத்து கார்த்திக், ரொம்ப நடிக்காதீங்க நீங்க கூல்ட்ரிங்கை மாற்றியதை பார்த்துட்டேன் என சொல்கிறான். 

இதனை தொடர்ந்து DJ யாராவது டான்ஸ் ஆட ரெடியா இருக்கீங்களா? என்று கேட்க, தீபா கையைத் தூக்கி கார்த்திக்காக நடனமாடினாள். தொடர்ந்து, இப்போவது மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க என கெஞ்ச, கார்த்திக் முடியாது என சொல்லி விடுகிறான். 

அடுத்து தீபா வெளியே வரும் போது, ஆனந்த் வேறொரு பெண்ணோடு உட்கார்ந்து ஒரே ஜூஸில் ரெண்டு ஸ்ட்ரா போட்டு குடித்து கொண்டிருக்கிறான். இதை பார்த்து அதிர்ச்சி அடையும் தீபா, கார்த்திக்கை கூப்பிட்டு காட்ட அவனும் அதிர்ச்சி அடைகிறான். 

அதனைத்தொடர்ந்து அவனுக்கு போன் செய்கிறார்கள். அதற்கு அவன், பெங்களூரில் இருப்பதாக பொய் சொல்ல, இருவரும் அவர்களை பின் தொடர்ந்து செல்கின்றனர். 

மறுபக்கம் கோயிலுக்கு வந்த அபிராமி, தீபாவுக்கு போன் போட தீபா போனை எடுக்காமல் இருக்கிறாள். கார்த்திக்கு போன் போட நாட் ரீச்சபள் என வருகிறது. இதனால் கடுப்பாகி வீட்டிற்கு வந்து விடுகிறாள் அபிராமி. இங்கே இவர்களோ சிக்னலில் ஆனந்தை மிஸ் செய்து விடுகின்றனர். 

தீபா கார்த்திக் வீட்டிற்கு வந்ததும், ஐஸ்வர்யா திருட்டுத்தனமாக போனை அவளது பேக்கில் போட்டு விட, அபிராமி தீபாவை திட்டி விடுகிறாள். தீபா நடந்தே வேகவேகமாக கோயிலுக்கு ஓடி வந்து கோயில் மூட போகும் தருணத்தில், விளக்கு போட்டு அபிராமி வேண்டுதலை நிறைவேற்றுகிறாள். 

மறுநாள் தீபா குளிக்க போன சமயத்தில், ஐஸ்வர்யா ரூமுக்குள் நுழைந்து கல்யாண பெண்ணுக்கு எடுத்த புடவையை எடுத்து விட்டு, அதற்கு பதிலாக வெள்ள புடவையையும் விபூதியையும் வைத்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.