தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Serial Karthigai Deebam Latest Today Episode Update

Karthigai Deebam: ரியாவுடன் ஆனந்துக்கு கல்யாணம்.. தீபாவுக்கு நேரும் அவமானம்.. கார்த்திகை தீபம் அப்டேட்ஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 18, 2024 02:26 PM IST

அண்ணன், தங்கை ஏன் உங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா என்று கேட்க, இல்ல.. நாளைக்கு மீனாட்சிக்கும் எனக்கும் கல்யாண நாள் அதனால என்ன பாக்கணும்னு ஆசைப்பட்டா என்று சொல்கிறான். ஆனால், ரியா ஆனந்தை மூளை சலவை செய்ய அவன் கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்கிறான்.

கார்த்திகை தீபம் அப்டேட்ஸ்!
கார்த்திகை தீபம் அப்டேட்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

கார்த்திக் தர்மலிங்கம் மாமா குடும்பத்தோட இந்த நிலைமைக்கு நாமளும் ஒரு காரணம்; அதனால தான் இங்கே கூட்டி வந்ததாக சொல்லி செல்கிறான். இதைத்தொடர்ந்து மறுபக்கம் ரியா ஆனந்திடம் நாளைக்கு ஒரு சப்ரைஸ் இருக்கு உங்களுக்கும் எனக்கும் ரிஜிஸ்டர் ஆபீசில் கல்யாணம் என்று சொல்கிறானள் 

அண்ணன், தங்கை ஏன் உங்களுக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லையா என்று கேட்க, இல்ல.. நாளைக்கு மீனாட்சிக்கும் எனக்கும் கல்யாண நாள் அதனால என்ன பாக்கணும்னு ஆசைப்பட்டா என்று சொல்கிறான். ஆனால், ரியா ஆனந்தை மூளை சலவை செய்ய அவன் கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்கிறான்.

மறுபக்கம் மீனாட்சி மற்றும் தீபா என இருவரும் கிச்சனில் சமைத்துக் கொண்டிருக்க, அங்கு வரும் ராஜேஸ்வரி திட்டம் போட்டு தான் உங்க அப்பா அம்மாவ இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்க, ஒன்னும் இல்லாத குடும்பம் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தான் இங்கு வந்து இருக்கீங்க என்று அவமானப்படுத்தி பேச, தீபா தேவையில்லாம பேசாதீங்க என்று சொல்கிறாள்.

ஜானகி மற்றும் மைதிலி இதை கேட்டு வருத்தப்படுகின்றனர். மீனாட்சி சாக்கடையில் கல் எறிஞ்சா அது நம்ம மேல தான் மீண்டும் வரும்.. நீ வா என்று தீபாவை அழைத்துச் செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

கார்த்திக் தர்மலிங்கம் குடும்பத்துடன் வீட்டிற்கு வந்து இவங்க மகள் வாங்குவதற்காக வீட்டை சேட்டு கிட்ட விட்டிருக்காங்க. அதனால அதை வீட்டை விட்டு காலி பண்ண சொல்லிட்டாரு இவங்களுடைய இந்த நிலைமைக்கு நாமளும் ஒரு காரணம் அதனால் தான் இங்க கூட்டிட்டு வந்தேன் என்று சொன்னான் 

உடனே ராஜேஸ்வரி மற்றும் ஐஸ்வர்யா என இருவரும் சேர்ந்து தர்மலிங்கம் குடும்பத்தை கண்டபடி பேசி அவமானப்படுத்தினர். எனக்கு தெரிஞ்சு கார்த்திக் தான் ஹாஸ்பிடலுக்கு செலவு பண்ணி இருப்பான், நகை வாங்கி கொடுக்கவும் அவன் தான் கொடுத்திருப்பான். இவங்க எதுவும் செலவு பண்ணி இருக்க மாட்டாங்க என்று பேசினர். 

ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா கார்த்திக் இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி? ஒரு வேலை பண்ணுங்க, சொத்த மூணா பிரிச்சு கொடுத்துடுங்க என்று சொல்ல, அபிராமி உச்சகட்ட டென்ஷன் ஆகி ஐஸ்வர்யாவை அடித்தார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்