இனி ஆட்டமே வேற.. களமிறங்கும் கிளாமர் குடோன்.. தூக்கப்பட்ட ஆர்த்திகா.. புதுப்பொலிவுடன் கார்த்திகை தீபம் சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இனி ஆட்டமே வேற.. களமிறங்கும் கிளாமர் குடோன்.. தூக்கப்பட்ட ஆர்த்திகா.. புதுப்பொலிவுடன் கார்த்திகை தீபம் சீரியல்

இனி ஆட்டமே வேற.. களமிறங்கும் கிளாமர் குடோன்.. தூக்கப்பட்ட ஆர்த்திகா.. புதுப்பொலிவுடன் கார்த்திகை தீபம் சீரியல்

Kalyani Pandiyan S HT Tamil
Nov 07, 2024 12:34 PM IST

புதுப்பொலிவுடன் மாறி இருக்கும் கார்த்திகை தீபம் சீரியலில் பாக்கியலட்சுமி சீரியல் புகழும், ரசிகர்களால் கிளமர் குடோன் என்று அழைக்கப்படும் ரேஷ்மா கமிட் ஆகி இருக்கிறார்.

இனி ஆட்டமே வேற.. களமிறங்கும் கிளமர் குடோன்.. தூக்கப்பட்ட ஆர்த்திகா.. புதிய பொலிவுடன் கார்த்திகை தீபம் சீரியல்
இனி ஆட்டமே வேற.. களமிறங்கும் கிளமர் குடோன்.. தூக்கப்பட்ட ஆர்த்திகா.. புதிய பொலிவுடன் கார்த்திகை தீபம் சீரியல்

இந்த நிலையில், தற்போது இந்த சீரியல் வரும் திங்கள் முதல் புத்தம் புதிய கிராமத்து கதைக்களத்தில், புது நட்சத்திரங்களுடன் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ரேஷ்மா பசுபுலேட்டி கார்த்திக்கின் அத்தையாக சாமுண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது தெரிய வந்திருக்கிறது. மேலும், கார்த்திக்கு ஜோடியாக ஜீ கேரளம் சேனல் மூலமாக பாப்புலரான வைஷ்ணவி நடிக்க உள்ளார். மேலும் பழம்பெரும் நடிகர்களாக விஜயகுமார், வடிவுக்கரசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

தீபா மேடை ஏற்றப்பட்ட பிறகும் சுயநினைவு வராமல் பித்து பிடித்தார் போல் உட்கார்ந்து இருக்க, தீபாவின் அம்மா ஜானகி, மைதிலி, அபிராமி ஆகியோர் அவளிடம் உருக்கமாக பேசி நினைவுகளை திருப்பி கொண்டு வர முயற்சி செய்தனர்.

இன்னொரு பக்கம் போலீஸ் ஐஸ்வர்யாவை சுற்றி வளைக்க முயற்சி செய்ய, ஒரு ரூமுக்குள் சென்ற அவள் அங்கிருக்கும் பைக்குள், துப்பாக்கியை மறைத்து வைத்து விட்டு, போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆகி விட்டாள்.

பிறகு போலீஸ் அங்கிருந்து சென்ற பிறகு மீண்டும் அந்த ரூமுக்குள் வந்து பார்க்க, அங்கே அந்த பை காணாமல் போனது. இதனையடுத்து பையின் உரிமையாளரை தேடி கண்டுபிடித்து உங்களிடம் தனியாக பேச வேண்டும் என ரூமுக்கு அழைத்து அடித்து துவைத்து பேக்குக்குள் இருந்து துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

இன்னொரு பக்கம், தீபாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த டாக்டர், சக்தி நர்சை பார்ப்பதற்காக ஆசிரமத்திற்கு வந்தார். இதற்கிடையே சக்தி வெளியே சென்றிருப்பதாக சொல்ல, இந்த ரிப்போர்ட்டை அவரிடம் கொடுத்து விடுங்கள் என கொடுத்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து தீபாவிடம் அவரது அப்பா தர்மலிங்கத்தின் போட்டோவை காட்டி, அவர்களது பாசத்தைப் பற்றியும், பாடகி கனவு பற்றியும் எடுத்துச் சொல்லி தீபாவுக்கு பழைய நினைவை கொண்டுவர முயற்சி செய்தனர். ஆனாலும் அப்போதும் எந்த பயனும் இல்லை.

பிறகு சக்தி நர்ஸ் உள்ளே வர, ஜானகி, மைதிலி ஆகியோர் தீபா கிடைக்க நீங்கதான் முக்கிய காரணம் என நன்றி கூறினர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.