தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Karthika Deepam Latest Today Episode Update

Karthigai Deepam: ‘தீபா கார்த்திக்ன்னு போடுங்க..’ - கெத்து காண்பித்த தீபா.. ஆனந்த கண்ணீர் வடித்த தர்மலிங்கம்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 09, 2024 03:01 PM IST

ஐஸ்வர்யா மாயாவுக்கு போன் செய்து, நீங்க சொன்ன மாதிரியே இந்த பிரச்சினையில் அருண் எனக்கு சப்போர்ட்டா பேசுனாரு.எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு நன்றி என கூறி போனை வைக்கிறாள் - கார்த்திகை தீபம் அப்டேட்!

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் மற்றும் அருண் என இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவானது. 

இதனையடுத்து அபிராமி சத்தம் போட்டு சண்டையை நிறுத்தி, ரூமுக்கு அனுப்பி வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் 

ஐஸ்வர்யா மாயாவுக்கு போன் செய்து, நீங்க சொன்ன மாதிரியே இந்த பிரச்சினையில் அருண் எனக்கு சப்போர்ட்டா பேசுனாரு.எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு நன்றி என கூறி போனை வைக்கிறாள். 

இந்த பக்கம் கார்த்திக் தீபாவுக்காக விழா நடத்த உள்ள நிலையில், அதற்கான போஸ்டரை வீட்டிற்கு எடுத்து வந்து தீபாவிடம் காட்டுகிறான்.

இதை பார்த்த தீபா, பல்லவி என்ற பெயருக்கு பதிலாக தீபா கார்த்திக் என்று பெயர் இருக்கட்டும், இதுக்கு காரணமாக இருந்தது நீங்க தான் என்று சொல்ல, கார்த்திக்கும் தீபாவின் ஆசைப்படியே பெயரை போடுவதாக சொல்கிறான். 

மறுநாள் அபிராமி, தர்மலிங்கம் வீட்டு வாசல் உட்பட எல்லா இடங்களிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதை பார்த்து கடுப்பாகும் ஐஸ்வர்யா, இதை தடுக்க ஏதாவது செய்யணும் என்று பிளான் போடுகிறாள். 

கார்த்திக், தர்மலிங்கத்திற்கு போன் செய்து வெளியே வந்து பார்க்க சொல்ல, எல்லோரும் போஸ்டரை பார்த்து சந்தோசப்படுகின்றனர். 

தொடர்ந்து தர்மலிங்கம், இதுக்காக தான் இவ்வளவு நாளா காத்திட்டு இருந்தேன், அது இன்னைக்கு உங்களால் நடந்திருக்கு மாப்பிள்ளை.. என்று ஆனந்த கண்ணீர் விட்டார். 

தீபாவும் இங்கே போஸ்டரை பார்த்து சந்தோசப்படுகிறாள். இப்படியான நிலையில், அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.