தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Karthigai Deepam Today Latest Episode Update

Karthigai Deepam: தேடுதல் வேட்டையில் கார்த்திக்.. சிக்குவாரா தீபா.. கார்த்திகை தீபம் அப்டேட் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 22, 2024 02:24 PM IST

“கார்த்திக் டொனேஷன் ஏதாவது வேண்டுமா என்று கேட்க, அவர்கள் பல்லவி பாடிய பாடல் குழந்தைகள் எல்லோருக்கும் மிகவும் பிடித்து விட்டது. அவர்களை வைத்து பாட வைத்தால் அவர்கள் இன்னும் சந்தோஷப்படுவார்கள்” என்று கூறினர்.

கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், அபிராமி குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட, ஐஸ்வர்யா செய்த சதியால் தீபா கெட்ட பெயர் வாங்கினார். இதனையடுத்து இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் 

ஆஃபீஸில் கார்த்திக், சிதம்பரம் பல்லவியை உங்களுக்கு தெரிந்தாலே மனகஷ்டம்தான் வரும் என்று சொன்னதை நினைத்து பார்க்கிறான். தொடர்ந்து, பல்லவியை இன்னும் பத்து நாளில் பதவியை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுக்கிறான்.

பிறகு இளையராஜா அங்கு வர, அவனிடம் கார்த்திக், எனக்கு தெரிஞ்சு பல்லவி எனக்கு பரிச்சயமான ஒருத்தவங்களாதான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன். அதனாலதான் சிதம்பரம் அப்படி சொல்லி இருக்கார் என்று கூறுகிறான். 

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது, ஆசிரமத்தில் இருந்து சிஸ்டர்ஸ் சிலர் வருகின்றனர். அவர்கள் பார்வையற்ற குழந்தைகளுக்கான ஆசிரமம் நடத்தி வருவதாகவும், இந்த ஆசிரமம் தொடங்கி 25 வருடம் ஆகிவிட்டது என்றும் அதை கொண்டாடுவதற்கு ஒரு சில ஏற்பாடுகள் செய்து வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர்.

இதனையடுத்து கார்த்திக் டொனேஷன் ஏதாவது வேண்டுமா என்று கேட்க, அவர்கள் பல்லவி பாடிய பாடல் குழந்தைகள் எல்லோருக்கும் ரொம்ப பிடித்து விட்டது. அவர்களை வைத்து பாட வைத்தால் அவர்கள் இன்னும் சந்தோஷப்படுவார்கள்.அதற்கான ஏற்பாடுகள் செய்யுமாறு  கேட்கிறார்கள். 

இதைக் கேட்டு யோசிக்கும் கார்த்திக், பிறகு சம்மதம் தெரிவிக்கிறான். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது உணவுக்கான தலைமையை தானே ஏற்றுக் கொள்வதாக சொல்லி, அவர்களை அனுப்பி வைக்கிறான்.

பிறகு பல்லவியை கண்டுபிடிக்க என்ன செய்வது என யோசிக்க, கார்த்திக், எனக்கு சவுண்ட் இன்ஜினியரை விசாரித்தால் உண்மை தெரியும் என்று நினைக்கிறேன் என்று சொல்லி, அவரது வீட்டிற்கு கிளம்பி வருகின்றனர்.

சவுண்ட் இன்ஜினியர் வீடு பூட்டப்பட்டு இருந்தது. பக்கத்து வீட்டில் விசாரிக்க யாரோ 4 ரவுடிகள் வந்து அவர்களை அடித்து விட்டு சென்றதாகவும், அவர்கள் ஹாஸ்பிடலில் இருப்பதாகவும் சொல்ல இருவரும் கிளம்பி ஹாஸ்பிடல் வருகின்றனர். 

சவுண்ட் இன்ஜினியர் மனைவியை சந்தித்து, நடந்தவற்றை கேட்டுவிட்டு, என்ன செய்வது என்று தெரியாமல் வெளியே வருகின்றனர்.

பிறகு இளையராஜா ஒரு ஐடியாவை சொல்கிறான். கார்த்தியும் அதற்கு சம்மதம் கூறுகிறான். அதைத்தொடர்ந்து ரூபஸ்ரீயின் பாட்டி கோகிலா நடந்து வரும்போது, கீழே ஒரு நூறு ரூபாய் கிடைக்க அதை எடுத்து சந்தோஷப்படுகிறார். திரும்பவும் நடந்து வரும்போது கொஞ்சம் தூரத்தில் இன்னொரு 100 ரூபாய் நோட்டு கிடைக்கிறது.

அப்படியே நடந்து நடந்து வர ஒரு இடத்தில் 500 ரூபாய் நோட்டு கிடைக்க, கோகிலா அதை எடுத்துக்கொண்டே சந்தோஷமாக திரும்பும் போது இளையராஜா அங்கு நிற்கிறான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன? கார்த்தியின் திட்டம் தான் என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.