தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘தீபாவை தீர்த்துக்கட்ட திட்டம்.. அழுது புலம்பும் அருணாச்சலம்’ - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: ‘தீபாவை தீர்த்துக்கட்ட திட்டம்.. அழுது புலம்பும் அருணாச்சலம்’ - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 24, 2024 03:22 PM IST

Karthigai deepam: தீபாவை தீர்த்துக் கட்ட தயாரான திட்டம்.. ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த ரியா - கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai deepam: ‘தீபாவை தீர்த்துக்கட்ட திட்டம்.. அழுது புலம்பும் அருணாச்சலம்’ - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: ‘தீபாவை தீர்த்துக்கட்ட திட்டம்.. அழுது புலம்பும் அருணாச்சலம்’ - கார்த்திகை தீபம் அப்டேட்!

ட்ரெண்டிங் செய்திகள்

அபிராமியை சுட்டது யார்? 

அதாவது, போலீஸ்காரர்கள் அபிராமியை சுட்டது யாராக இருக்கும் என விசாரணை மேற்கொள்கின்றனர். எல்லோரும் ரியா தான் என்று சொல்ல, துப்பாக்கியில் ஆனந்தின் கைரேகை தான் இருக்கிறது. ரியாவின் கைரேகை இல்லை என போலீசார் தரப்பில்  சொல்லப்படுகிறது. மேலும், சிசிடிவி கேமராவிலும் ரியா குறித்து எந்த ஆதாரமும் இல்லை என சொல்கின்றனர். அத்தோடு, துப்பாக்கி சூட்டுக்கு பிறகு, கேமராமேன் சம்பவ இடத்தில் இல்லை ஆகையால் அவன் மேலயும் சந்தேகம் இருக்கிறது என்றும் கூறுகின்றனர். 

அடுத்ததாக ரம்யா வீட்டுக்கு வர, அவருடைய அப்பா, இப்போ அபிராமி எப்படி இருக்காங்க என்று கேட்பதோடு, கார்த்திக்கு போன் செய்து தர சொல்கிறார். தொடர்ந்து போன் போட்டு கொடுக்க, அதில் அவர் அபிராமியின் உடல்நிலை குறித்து விசாரிக்கிறாள். கார்த்திக் தற்போதைய நிலவரத்தை சொல்கிறான். பிறகு ரம்யா வெளியே கிளம்பும்போது, சாமியார் வேடத்தில் சேகர் வந்து நிற்க, ரம்யா யார் நீ என்று கேள்வி கேட்க அவன் நான்தான் மேடம் சேகர் என்று சொல்கிறான். 

உங்களாலயே என்னைய அடையாளம் கண்டுபிடிக்க முடியல. அப்பவே நாம பாதி ஜெயிச்சுட்டோம் என்று சொன்னதும், ரம்யா அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ரகசியமாக சொல்கிறாள். அதன் பிறகு, அருணாச்சலம் திடீரென தூக்கத்திலிருந்து எழுந்து, அபிராமியை நினைத்து அழுது புலம்ப எல்லோரும் அங்கு ஒன்று கூடி விடுகின்றனர். எல்லாத்துக்கும் காரணம், இந்த ஆனந்த்தான். இவனை போட்டு அடித்துக் கொள்ளுங்கள் என்று ஆவேச படுகிறார். அப்போது தீபா நீங்க இப்படி வருத்தப்பட்டு உடம்ப கெடுத்துக்காதீங்க மாமா… நான் போய் உங்களுக்கு சாப்பாடு கொண்டு வரேன் என்று உள்ளே செல்கிறாள்.

மன்னிப்புக்கேட்ட ஆனந்த் 

எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்னை மன்னிச்சிடுங்க என்று அருணாச்சலத்திடம் ஆனந்த் மன்னிப்பு கேட்க, அருணாச்சலத்துக்கு பால் கொண்டு வந்த தீபா, ரியா பத்தி பேப்பர்ல செய்தி வந்திருக்கு; கூடிய சீக்கிரம் போலீஸ் அவள கண்டுபிடிச்சிடுவாங்க என்று ஆறுதல் சொல்கிறாள். 

ரியாவை கண்டுபிடித்து கொடுத்தால் 10 லட்சம் என பேப்பரில் விளம்பரம் வந்திருப்பதை பார்த்த ஐஸ்வர்யா, பேசாமல் நாமலே பிடிச்சு கொடுத்துட்டு பத்து லட்சத்தை வாங்கிடலாமா என்று யோசிக்கிறாள். அப்போது ரியா போனில் வருகிறாள். அவள் பேப்பர்ல நியூஸை பார்த்து மாட்டி விட்டுடலாம்னு கூட யோசிக்காத.. உன் அம்மாவையும், உன்னையும் கொன்னுட்டு போயிட்டே இருப்பேன் என்று எச்சரிக்கிறாள்.

இதனையடுத்து, ஐஸ்வர்யா நான் அப்படியெல்லாம் யோசிக்கல என்று சமாளித்து உன்கிட்ட இருக்க வைரத்தோட மதிப்பு எவ்வளவு இருக்கும்? நீ அதெல்லாம் என்ன பண்ணுவ என்று கேட்க, ரியா உன்கிட்ட கொடுத்து விடுகிறேன் என்று சொல்கிறாள். அதை இப்பவே கொடுத்துடு என ஐஸ்வர்யா கேட்க, சுதாரித்த ரியா எதுக்கு உன்கிட்ட வைரத்தை கொடுத்து பிறகு, நான் ஜெயிலுக்கு போறதுக்கா என்று மடக்கி கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.