தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Karthigai Deepam Serial Today Episode Update Here

Karthigai Deepam: அண்ணாமலை பெயிண் டப்பாவ எடு.. கன்கச்சிதமாக முடிந்த பொங்கல் வேலை.. டென்ஷன் ஆன அபிராமி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 17, 2024 01:58 PM IST

பொங்கல் நெருங்கிடுச்சு.. இப்படி கடைசி நேரத்தில் வர முடியாதுன்னு சொன்னா, யாரை வைத்து பெயிண்ட் அடிக்கிறது என சத்தம் போடுகிறாள் அபிராமி.

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இந்த வருட பொங்கலுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது தீபா பொறுப்பு என கொத்து சாவியை அபிராமி தீபாவிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அபிராமி வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பதற்காக ஆட்களை வர சொல்லி, அவர்களுக்காக காத்திருக்க, அபிராமிக்கு ஒரு போன் கால் வருகிறது. 

அதில் பெயிண்ட் அடிப்பவர்கள் காண்ட்ராக்டர் வீட்டில் வேலை இருப்பதால், இன்றைக்கு வர முடியாது என்று சொல்லுகிறார்கள். இதனைக் கேட்ட அபிராமி டென்ஷன் ஆகிறார்.பொங்கல் நெருங்கிடுச்சு.. இப்படி கடைசி நேரத்தில் வர முடியாதுன்னு சொன்னா, யாரை வைத்து பெயிண்ட் அடிக்கிறது என சத்தம் போடுகிறாள் அபிராமி. 

இந்த நிலையில் ரூமுக்குள் செல்லும் தீபா, பெயிண்டர் கெட்டப்பில் வெளியே வருகிறாள். இதைப் பார்த்து எல்லோரும் என்ன இது என்று கேட்க, நாம எதிர்பார்த்த ஒரு விஷயம் நடக்கலனா நாமே களத்துல இறங்கிட வேண்டியது தான் என்று சொல்லி அருணாச்சலத்திடம் ஒரு துண்டை கொடுக்கிறாள்.

தீபா சொல்வதும் சரிதான், முன்பெல்லாம் நம்ம வீட்டுக்கு நாமளே தான் பெயிண்ட் அடிப்போம். இப்பவும் அதே மாதிரி பண்ணிட வேண்டியது தான் என்று சொல்கிறாள். இதனிடையே ஐஸ்வர்யா நைசாக நழுவ பார்க்க, மீனாட்சி இழுத்து கோர்த்து விடுகிறாள்.

அதன் பிறகு எல்லோரும் பெயிண்ட் அடிக்க தொடங்குகிறார்கள். கார்த்திக் சூப்பர்வைசராக வேலை வாங்குகிறான். ஆனந்தும் மீனாட்சியும் ஒன்றாக சேர்ந்து பெயிண்ட் அடிக்கின்றனர்.

ஆனந்த் மீனாட்சியிடம் புருஷனை கவனிக்க மாட்டியா என்று ரொமான்டிக்காக பேசிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து கார்த்திக் அங்கு வந்துவிட, அதை கவனித்த மீனாட்சி கவனிச்சிட்டா போச்சு கண்ணை மூடுங்கள் என்று சொல்லி அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகிறாள். இதனையடுத்து அந்த இடத்தில் ,கார்த்திக்  வந்து நிற்க ஆனந்த் அதிர்ச்சி அடைகிறான். 

கார்த்திக் உடனே.. அண்ணே… என்ன வேலை பண்ண சொன்னா, என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க… என கலாய்த்து கார்த்திக் அங்கிருந்து நகர்கிறான்.

பிறகு தீபா வீட்டின் பின்புறம் ஏணியில் ஏறி பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென ஸ்லிப்பாகி கீழே விழ போக கார்த்திக் தாங்கி பிடிக்கிறான்‌. 

இந்த நேரம் பார்த்து அங்கு வரும் ஆனந்த், என்னை சொல்லிட்டு இப்போ நீங்க என்ன தம்பி பண்றீங்க என்று கார்த்திக்கை கலாய்க்க… ஹெல்ப் பண்றேன் என கூறுகிறான் கார்த்திக்

பெயிண்ட் அடிக்கும் வேலை மொத்தமா சிறப்பாக நடந்து முடிய அண்ணாமலை அபிராமி முன்னாடி வைத்து தீபாவை பாராட்ட அபிராமி டென்ஷன் ஆகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.