தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Karthigai Deepam Serial Today Episode Update Here

Karthigai Deepam: ஆஃபீஸூக்கு நுழைந்த சிதம்பரம்.. தீபாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. பரபர கார்த்திகை தீபம் சீரியல்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 08, 2024 01:38 PM IST

கார்த்திக் ஆஃபீஸ்க்குள் வந்த சிதம்பரம்.. தீபாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம் சீரியல்!
கார்த்திகை தீபம் சீரியல்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் படகு போட்டியில் ஜெயித்த நிலையில்,இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

கார்த்திக் தீபாவிடம், தீபா எங்கே போய்ட்டீங்க என்று கேட்க கோயிலுக்கு போயிருந்ததாக சொல்லி சமாளிக்கிறாள். 

தொடர்ந்து கார்த்தி படகு போட்டியில் தான் ஜெயிச்சதை குறிப்பிட்டு, மொழி, மருமகள் உங்களோட பெயர்ல இந்த ரெசார்ட்ட வாங்கிடலாமா என்று கார்த்தி கேட்கிறான். அதற்கு அருணாச்சலம், அண்ணன் தம்பிகளுக்குள்ள பிரச்சினை வேண்டாம், இப்போதைக்கு ரிசார்ட் வாங்குவதை தள்ளிப் போடலாம் என்று கூறி விடுகிறார்.

அதனை தொடர்ந்து கார்த்திக் பல்லவிக்கு போன் போட, அவர் போனை எடுக்காத காரணத்தினால், வாய்ஸ் மெசேஜில் அக்ரிமெண்ட் போட்ட மாதிரி வந்து நல்லபடியா பாடி கொடுங்க சொல்கிறான். இதைக் கேட்டு தீபா தர்ம சங்கடம் அடைகிறாள்.

பிறகு இவர்கள் ரெசார்ட்டில் இருந்து கிளம்ப, கௌஷிக் இந்த மாதிரி குடும்பத்தை நான் பார்த்ததே இல்லை என்று பாராட்டி வழி அனுப்பி வைக்கிறார். அடுத்து தீபா ஆபீஸ் வர, ஸ்வேதா வழக்கம்போல வம்பிழுக்க தொடங்குகிறார்.

என்ன தீபா ரெண்டு மூணு நாளா ஆளே இல்ல; சொல்லிட்டு லீவ் போட மாட்டீங்களா என்று கேட்க, தீபா நான் பாஸ் கிட்ட சொல்லிட்டு தான் லீவு போட்டேன் என்று பதிலடி கொடுக்கிறாள். 

நேரம் பார்த்து சிதம்பரம் கார்த்திக் ஆஃபீஸ்க்குள் என்ட்ரி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.