தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Karthigai Deepam Serial Today Episode Update

Karthigai Deepam: ஆனந்த் செய்து கொடுத்த சத்தியம்.. பத்திரிகை ஆஃபிஸை அலறவிட்ட கார்த்திக்! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 06, 2024 02:37 PM IST

ஆனந்த் செய்து கொடுத்த சத்தியம்.. தீபாவுக்காக அதிரடி காட்டிய கார்த்திக் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில், ஆனந்த் சூசைட் அட்டென்ட் பண்ண ரியாவை ஹாஸ்பிடலில் சென்று சந்திக்க, அவள் உங்களுக்கு மீனாட்சியுடன் கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சும் உங்க வாழ்க்கைல வந்தது என்னுடைய தப்பு தான். அதனால தான் நான் என் வாழ்க்கையை முடிச்சுக்க முடிவெடுத்தேன் என்று சொல்கிறாள்

இதை கேட்ட ஆனந்த், இல்ல…. நான் உன்னை பார்க்க வந்திருக்கணும்… என் மேல தான் தப்பு என்று சொல்லி, நான் உன்னுடைய ஆசைப்படியே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் என சத்தியம் செய்து கொடுக்கிறான்.

மறுபக்கம் தீபாவை பற்றி தவறான செய்தியை போட்ட பத்திரிக்கை ஆபீஸூக்கு வரும் கார்த்திக், எதை வச்சு இந்த செய்தியை போட்டீங்க என்று சத்தம் போட, மேனேஜர் எடிட்டரை கூப்பிட்டு கேட்கிறார். 

அவரோ… போட்டோவுடன் செய்தி வந்திருந்தது. அதனால் தான் போட்டதாக சொல்கிறார். ஒரே ஒரு போட்டோவை வச்சி தீர விசாரிக்காமல், எப்படி இப்படி நியூஸ் போடலாம் என்று மேனேஜர் சத்தம் போடுகிறார்.

உடனே கார்த்திக் தீபாவ பத்தி போட்ட இந்த செய்தி தப்புன்னு மன்னிப்புக் கேட்டு, நீங்க இன்னொரு செய்தி போடணும் இல்லனா நான் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுகிறான். அதனைதொடர்ந்து பத்திரிக்கை ஆஃபிஸில் மன்னிப்பு செய்தி வெளியிட ஒப்புக் கொள்கின்றனர்.

அதை தொடர்ந்து தர்மலிங்கம் மற்றும் ஜானகி இருவரும் நகை கடைக்குச் சென்று, தீபாவிற்காக ஒரு தங்க நகையை வாங்குகின்றனர். 

அதனை அபிராமி வீட்டிற்கு வந்து கொடுக்க, நாங்க யாரும் இதை எதிர்பார்க்கலையே அப்படி இருக்கும்போது, எதற்கு இதை வாங்கிட்டு வந்தீங்க என்று  அபிராமி வீட்டில் உள்ளவர்கள் கேட்கிறார்கள். 

அதற்கு தர்மலிங்கம் எனக்கும், என் பொண்ணுக்கு சீர் செய்யணும்னு ஆசை இருக்கும் இல்லையா என்று சொல்ல, கார்த்திக் அதெல்லாம் எதுக்கு மாமா என்று சொல்கிறான்.

இருந்தாலும் தன்னுடைய ஆசைக்காக வாங்கிக்குமாறு தீபாவிடம் கொடுக்க, தீபா தயங்கி நிற்கிறாள். அதனை தொடர்ந்து மாப்ள நீங்க சொன்னா தான் தீபா வாங்கிப்பா என்று சொல்லி, அதை தீபாவிடம் கொடுக்கிறார். 

இதற்கிடையில் ராஜேஸ்வரி, உங்க பொண்ணுக்கு சீர் செய்யறதுக்கு கூட நாங்க சொல்லி தான் செய்ய வேண்டியதா இருக்கு, அப்புறம் உங்க பொண்ணுக்கு ஏதோ மியூசிக் டைரக்டரோட தொடர்பு இருக்காமே என்று அவமானப்படுத்தி பேசுகின்றனர்.

அதற்கு தர்மலிங்கம் அது தப்பான செய்தியா இருக்கும் என்று சொல்ல, கார்த்திக் ஆமா மாமா அது தப்பான செய்தி தான். இன்னைக்கு சாயங்காலமே அதே பத்திரிக்கையில் தீபா பற்றிய செய்தி தப்புன்னு மன்னிப்பு செய்தி வெளியாகும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்