தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Karthigai Deepam Serial Today Episode Update

Karthigai deepam: இரண்டாவது முறை ஏறும் தாலி! - தீபா எமோஷனல்! - கார்த்திகை தீபம் அப்டேட்ஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 29, 2024 01:40 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் அப்டேட்ஸ்!
கார்த்திகை தீபம் அப்டேட்ஸ்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரியா ஆனந்தை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்ய மீனாட்சி சுமங்கலி பூஜைக்கு கூப்பிட அவளை திட்டி விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மீனாட்சி போனை வைத்ததும் அபிராமி, என்ன மீனாட்சி ஆனந்த் கிட்ட சுமங்கலி பூஜைக்கு வர சொல்லி சொல்லிட்டியா என்று கேட்கிறாரள் 

 அதற்கு அவள், சொல்லிட்டேன் அத்தை ஆனால் அவர் திட்டுறாரு என்று சொல்கிறாள்.

உடனே, அபிராமி ஆனந்துக்கு போன் போட்டு என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது, ஆனால் நீ சுமங்கலி பூஜைக்கு இங்க இருக்கணும் என்று ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போடுகிறாள்.

அதன் பிறகு ஆனந்த் பூஜை நடக்கும் போது அங்க இருப்பேன், முடிந்ததும் கிளம்பிடுவேன் என்று வாக்கு கொடுத்து விட்டு கிளம்பி வருகிறான். 

அதனை தொடர்ந்து மறுநாள் காலையில் அபிராமி வீடே அலங்காரங்களுடன் திருவிழா கோலத்தில் காட்சி அளிக்க, தீபா துளசி மாடத்தை சுற்றி வருகிறாள். 

மீனாட்சி அங்கு வந்து என்ன தீபா காலையிலேயே பக்தி பலமா இருக்கு என்று கேட்கிறாள்.

முதல் முறை கார்த்திக் சார் என் கழுத்தில் தாலி கட்டும் போது அவருடைய முகத்தை பார்க்கல, ஆனால் இந்த முறை அவர் தாலி கட்டும் போது அவருடைய முகத்தை பார்க்க போறேன், அதை நினைத்தாலே சந்தோசமாக இருக்கு என்று சொல்கிறாள். 

பிறகு அய்யர் வருகை தர, அவர் தடபுடலான ஏற்பாடுகளை பார்த்து, நான் மந்திரம் சொன்னா மட்டும் போதும் போலயே எல்லா ஏற்பாடும் பக்காவா இருக்கு என்று பாராட்டுகிறார்.

அதன் பிறகு சுமங்கலி பூஜை தொடங்க, மறுபக்கம் ரியா மாலை மற்றும் தாலியுடன் கோயிலுக்கு வந்து ஐயரை எல்லா ஏற்பாடுகளையும் செய்ய சொல்கிறாள். 

இங்கே பூஜையில் ஆனந்த் கையில் தாலியை கொடுத்து மீனாட்சி கழுத்தில் கட்ட சொல்ல அவன் ரியா சொன்னதை நினைத்து உறைந்து நிற்கிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்