அசால்ட் காட்டிய அருண்.. வெளியே வந்த அபிராமி.. உள்ளே போன ராஜேஸ்வரி.. ஷாக்கில் ஐஸ்வர்யா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அசால்ட் காட்டிய அருண்.. வெளியே வந்த அபிராமி.. உள்ளே போன ராஜேஸ்வரி.. ஷாக்கில் ஐஸ்வர்யா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

அசால்ட் காட்டிய அருண்.. வெளியே வந்த அபிராமி.. உள்ளே போன ராஜேஸ்வரி.. ஷாக்கில் ஐஸ்வர்யா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Oct 12, 2024 02:18 PM IST

அசால்ட் காட்டிய அருண்.. வெளியே வந்த அபிராமி..ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அசால்ட் காட்டிய அருண்.. வெளியே வந்த அபிராமி.. உள்ளே போன ராஜேஸ்வரி.. ஷாக்கில் ஐஸ்வர்யா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
அசால்ட் காட்டிய அருண்.. வெளியே வந்த அபிராமி.. உள்ளே போன ராஜேஸ்வரி.. ஷாக்கில் ஐஸ்வர்யா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

கார்த்திகை தீபம் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், அபிராமி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அபிராமியை கோர்ட்டில் ஆஜர்படுத்த, ராஜேஸ்வரி ரூ 100 கோடி வரதட்சணை கேட்டதாக சொல்ல, அபிராமி இதெல்லாம் பொய் என்று சொல்கிறாள். கோர்ட்டில் அதற்கான ஆதாரம் என்ன இருக்கு என்று கேட்க, கார்த்திக் ஆதாரம் இருப்பதாக ஷாக் கொடுக்கிறான்.

 

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

போலி கேஸ்

ராஜேஸ்வரி வக்கீலிடம் பேசிய விஷயங்களை அருண் தூரத்தில் இருந்து வீடியோ எடுத்திருக்க, கார்த்திக் அதை கோர்ட்டில் சமர்ப்பித்தான். அதில் ராஜேஸ்வரி அபிராமி மேல் கொடுத்திருப்பது போலி கேஸ் என்பது தெரிய வருகிறது.இதனால், கோர்ட்டை அவமானப்படுத்தியதால் ராஜேஸ்வரிக்கு 10 நாள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபிராமியை விடுதலை செய்யப்படுகிறார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை கொண்டாடும் வகையில் தீபா இருக்கும் ஆசிரமத்தில் மீனாட்சி மற்றும் மைதிலி ஆகியோர் சாப்பாடு கொடுக்க அப்போது இன்னொருத்தருக்கும் கொடுங்க, உடம்பு முடியாமல் ரூமில் இருப்பதாக சொல்ல, மீனாட்சி நானே கொண்டு வந்து தரேன் என்று தீபா இருக்கும் ரூமை நோக்கி சென்றாள். இதற்கிடையே, மைதிலி இங்க இவங்களுக்கு கொடு என்று மீனாட்சியை கூப்பிட, தீபாவை பார்க்க முடியாமல் போய் விடுகிறது.

அதன் பிறகு ராஜேஸ்வரியை ஐஸ்வர்யா இருக்கும் சிறையில் அடைக்க, அம்மாவை பார்த்து ஐஸ்வர்யா அதிர்ச்சியாக ராஜேஸ்வரி நடந்ததை சொல்ல, ஐஸ்வர்யா கடுப்பாகிறாள். அடுத்து கார்த்திக் வீட்டில் கீதா கண்ணில் தீபா எழுதிய டைரி கிடைக்க, அதில் தீபா கார்த்திக் மீதான காதல் மற்றும் மீனாட்சியின் சப்போர்ட் குறித்து எழுதி இருப்பது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

 

ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

கார்த்திக் அபிராமியை வெளியே எடுக்க முயற்சி செய்ய இது வரதட்சணை கேஸ் என்பதால் எதுவும் செய்ய முடியாது என்று கூறப்பட்டது. அதன் பிறகு வக்கீலை வைத்து பேச, அப்போதும் இது ரொம்ப சீரியசான கேஸ், எங்களால் எதுவும் பண்ண முடியாது. எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பாத்துக்கோங்க என ஷாக் கொடுத்தனர். 

அப்படியும் இல்லனா கேஸ் கொடுத்தவர்களை வாபஸ் வாங்க வையுங்க என்று சொல்ல, அருண் வா கார்த்திக் பார்த்துக்கலாம் என்று கிளம்பி சென்றான். அதன் பிறகு ராஜேஸ்வரியை சந்தித்து பேச, அவள் என் பொண்ணை உள்ள தள்ளிட்டு நீங்க மட்டும் எப்படி நல்லா இருக்கலாம் என்று பேச, கார்த்திக் கோபப்பட்டு அங்கிருந்து கிளம்பினான். 

இதை தொடர்ந்து அடுத்த நாள் கோர்ட் கூட அபிராமியை கூண்டில் ஏற்றி அவள் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்தனர்.