கைமாறிய துப்பாக்கி.. குறிவைத்த புல்லட்.. ஊசலில் கார்த்திக் உயிர்! இறுதியில் வந்த தீபா!- கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக்கும், தீபாவும் ஹனிமூன் சென்ற நிலையில், அங்கு ஷூட்டிங்கில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ரியல் துப்பாக்கி என்பது தெரிய வந்தது. -
கைமாறிய துப்பாக்கி.. குறிவைத்த புல்லட்.. ஊசலில் கார்த்திக் உயிர்! இறுதியில் வந்த தீபா!- கார்த்திகை தீபம் அப்டேட்!
கடைசி நொடியில் கார்த்தியை காப்பாற்றிய தீபா.. ஹனிமூன் ட்ரிப்பில் மீண்டும் நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் நடந்தது என்ன என்பதினை இங்கே பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபாவை பாம்பு கடிக்க, டாக்டர் தூங்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு சென்றதால், எல்லாரும் சேர்ந்து தீபாவை என்டர்டைன்மெண்ட் செய்து தூங்காமல் பார்த்துக்கொண்டனர். இந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.