சோக கடலில் மூழ்கிய தீபா.. கொலைவெறியில் ஐஸ்வர்யா.. திண்டாடும் கார்த்திக்.. கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சோக கடலில் மூழ்கிய தீபா.. கொலைவெறியில் ஐஸ்வர்யா.. திண்டாடும் கார்த்திக்.. கார்த்திகை தீபம் அப்டேட்!

சோக கடலில் மூழ்கிய தீபா.. கொலைவெறியில் ஐஸ்வர்யா.. திண்டாடும் கார்த்திக்.. கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 29, 2024 02:44 PM IST

சோகக்கடலில் மூழ்கிய தீபா மூழ்கி இருக்கும் நிலையில், ஐஸ்வர்யா அவளை கொல்ல வழி தேடிக்கொண்டிருக்கிறாள்.

சோகக்கடலில் மூழ்கிய தீபா.. கொலைவெறியில் ஐஸ்வர்யா.. திண்டாடும் கார்த்திக்.. கார்த்திகை தீபம் அப்டேட்!
சோகக்கடலில் மூழ்கிய தீபா.. கொலைவெறியில் ஐஸ்வர்யா.. திண்டாடும் கார்த்திக்.. கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ஐஸ்வர்யா கையில் இருந்து துப்பாக்கி புற்றுக்குள் விழுந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

புற்றுக்குள் கையை விட்ட ஐஸ்வர்யா

அதாவது, ஐஸ்வர்யா புற்றுக்குள் கையை விட்டு துப்பாக்கியை வெளியே எடுக்கிறாள். அதை தொடர்ந்து ஐஸ்வர்யா அங்கிருந்து தீபாவை தேடி கிளம்புகிறாள். மறுபக்கம் துங்காவும் தீபாவை தேடி அலைய இன்ஸ்பெக்டர் சரவணன் ஆசிரமத்தின் வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, கார்த்தியை வெளியே கொண்டு வர கிளம்புகிறார்.

தீபா
தீபா

பிறகு போதை பொருள் தடுப்பு பிரிவினரை சந்தித்து ஆதாரத்தை கொடுத்து கார்த்தி நிரபராதி என்பதை நிரூபித்து வெளியே கொண்டு வருகிறார். இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் ரூபஸ்ரீயை சுற்றி வளைத்து, கைது செய்கின்றனர். ஐஸ்வர்யா துங்காவை சந்தித்து, அந்த தீபாவை உயிரோட விட கூடாது என்று திட்டம் போடுகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

ஐஸ்வர்யாவை தேடி வந்த போலீஸ், கோயிலுக்குள் நுழைந்து அவரைத் தேட, அவள் ஓர் இடத்தில் ஒளிந்து கொண்டாள். ஒரு கட்டத்தில் போலீஸ் ஐஸ்வர்யா இங்கே இல்லை என்று சொல்லி கோயிலை விட்டு வெளியேறி விட்டனர்.

அதன் பின்னர் வெளியே வரும் ஐஸ்வர்யா மீண்டும் தீபாவைத் தேடத் தொடங்க, அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த சக்தி நர்ஸ் மீது அவள் மோதிவிட்டாள். அவளைப் பார்த்த அவள் நீ இங்கதான் இருக்கிறாயா?.. அப்படியானால் தீபாவும் இங்கதான் இருக்கணும் என துப்பாக்கியுடன் தீபாவை தேடி கண்டுபிடித்து அவளை சுடச் சென்றாள். இதற்கிடையே, ஐஸ்வர்யாவுக்கும், சக்திக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, ஐஸ்வர்யா தீபாவை சுட்டுக் கொல்லத் துணியும் நேரத்தில், சக்தி நர்ஸ், கட்டையால் ஐஸ்வர்யா கையில் மீது அடித்து விட்டாள். இதனால், துப்பாக்கி பறந்து போய் பாம்பு புற்றுக்குள் விழுந்தது. இதில் ஐஸ்வர்யா வலி தாங்காமல் கீழே விழ, சக்தி நர்ஸ், தீபாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனாள்

கஞ்சா வழக்கில் கார்த்திக்

கார்த்திக் ஸ்டேஷனில் இருக்க, இன்ஸ்பெக்டர் சரவணன் நடந்தது என்ன என ஆசிரமத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராந்தான். அப்போது, ரூபஸ்ரீ தான் போதைப் பொருளை வைத்தாள் என்பது தெரிய வந்தது. அந்த ஆதாரங்களை வைத்து கார்த்தியை வெளியே கொண்டு வர முயற்சிகள் நடக்க, மறுப்பக்கம் அபிராமியின் குடும்பத்தார் கச்சேரி நடக்கும் இடத்திற்கு வந்து தீபாவிற்காக காத்திருந்தனர். இங்கே ஐஸ்வர்யா மீண்டும் எழுந்து புற்றுக்குள் விழுந்த துப்பாக்கியை எடுக்க முயற்சி செய்தாள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.