தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ரம்யா கொடுத்த ஷாக்.. ஏமாற்றமடைந்த ஆனந்த், உண்மையை உடைத்த தீபா- கார்த்திகை தீபம்!

Karthigai Deepam: ரம்யா கொடுத்த ஷாக்.. ஏமாற்றமடைந்த ஆனந்த், உண்மையை உடைத்த தீபா- கார்த்திகை தீபம்!

Aarthi Balaji HT Tamil
May 29, 2024 01:43 PM IST

Karthigai Deepam: ஆனந்த் அருணை சந்தித்து ரம்யா கார்த்திக்கை லவ் பண்ணுவதாக சொல்ல அவன் உனக்கு யார் சொன்னது என்று கேட்க ஐஸ்வர்யா பெயரை சொன்னால் பிரச்சனை ஆகிடும் என்ற காரணத்தால் ஒருத்தர் மூலமாக விஷயம் தெரிய வந்தது, கன்பார்ம் தான் என்று சொல்கிறான்.

ரம்யா கொடுத்த ஷாக்.. ஏமாற்றமடைந்த ஆனந்த், உண்மையை உடைத்த தீபா
ரம்யா கொடுத்த ஷாக்.. ஏமாற்றமடைந்த ஆனந்த், உண்மையை உடைத்த தீபா

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவை ரவுடி ஒருவன் கொல்ல வர அவள் காரில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் இன்று அடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஆனந்த் அருணை சந்தித்து ரம்யா கார்த்திக்கை லவ் பண்ணுவதாக சொல்ல அவன் உனக்கு யார் சொன்னது என்று கேட்க ஐஸ்வர்யா பெயரை சொன்னால் பிரச்சனை ஆகிடும் என்ற காரணத்தால் ஒருத்தர் மூலமாக விஷயம் தெரிய வந்தது, கன்பார்ம் தான் என்று சொல்கிறான்.

ரம்யாவை ஆபிஸில் வைத்து சந்திப்பு

அடுத்து கார்த்திக், தீபாவை டாக்டரிடம் அழைத்து செல்ல அவர் பயப்படுற மாதிரி ஒன்னும் இல்ல, நாளைக்கு திரும்பவும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க, இப்போ நீங்க வீட்டிற்கு போகலாம் என்று அனுப்பி வைக்கின்றனர். அடுத்ததாக அருண் ஆனந்த ஆகியோர் ரம்யாவை ஆபிஸில் வைத்து சந்திக்கின்றனர்.

நான் அனுப்புன எம்பிளாயி எப்படி வேலை செய்யுறான்? என்று ஆனந்த் கேட்க ரொம்ப நடிக்காத அவன் உன் தம்பி தான் என்று எனக்கு தெரியும் என்று ஷாக் கொடுக்கிறாள் ரம்யா. பிறகு அவனை எதுக்கு என்கிட்டே வேலைக்கு அனுப்பின என்று கேட்க அவன் இண்டஸ்ட்ரி பத்தி தெரிஞ்சிக்கணும் அதுக்கு உன் கம்பெனி தான் சரியா இருக்கும்னு அனுப்பியதாக சொல்கிறான். பிறகு நீ கார்த்தியை லவ் பண்றியா என்று கேட்க ரம்யா இல்லை அவன் எனக்கு தொழிலாளி தான் என்று பொய் சொல்கிறாள்.

அருண், ஆனந்த் கார்த்திக்கு கல்யாணம் ஆகிடுச்சு என்ற விஷயம் தெரிந்தால் அவனை துரத்தி விடுவாள் என்று கணக்கு போட்டு உண்மையை சொல்ல ரம்யா எல்லாம் எனக்கு தெரியும், தீபா என்னுடைய தோழி தான்.

உண்மையை சொல்ல சரியான நேரம் இல்லை

அவளுக்கு எப்படி நான் துரோகம் செய்வேன் என்று ஷாக் கொடுக்க இவர்கள் ஏமாற்றத்துடன் வெளியே வருகின்றனர். பிறகு ரம்யாவின் மனசாட்சி எதுக்கு பொய் சொன்ன? ஆமாம்னு உண்மையை சொல்ல வேண்டியது தானே என்று கேள்வி எழுப்ப உண்மையை சொல்ல இது சரியான நேரம் இல்லை என்று சொல்கிறாள்.

அடுத்து நடக்க போவது என்ன

மறுபக்கம் வீட்டிற்கு வந்த தீபா கார்த்திக்கிடம் எனக்கு நடந்தது ஆக்சிடென்ட் இல்ல, ஒரு ரவுடி தன்னை கொல்ல வந்ததாக உண்மையை உடைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்