Karthigai Deepam: தீபாவை தீர்த்துக்கட்ட பரிகாரம்.. கொத்தாக மாட்டிய சாவி.. கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: தீபாவை தீர்த்துக்கட்ட பரிகாரம்.. கொத்தாக மாட்டிய சாவி.. கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: தீபாவை தீர்த்துக்கட்ட பரிகாரம்.. கொத்தாக மாட்டிய சாவி.. கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 28, 2024 03:23 PM IST

Karthigai Deepam: ஐஸ்வர்யா அத்தைக்காக வேண்டிக்கிட்டு அலகு குத்திய விஷயத்தை சொல்ல, அருணாச்சலம் இதை முதல்லயே சொல்லி இருக்கலாம்ல என்று மனம் இறங்குகிறார். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: போலி சாமியார் சொன்ன பரிகாரம்.. உயிருக்கு வர போகும் ஆபத்து என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
Karthigai Deepam: போலி சாமியார் சொன்ன பரிகாரம்.. உயிருக்கு வர போகும் ஆபத்து என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

வித்தியாசமான பரிகாரம் 

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவும், தீபாவும் சாமியாரை பார்க்க வந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  சாமியார் உங்க பிரச்சினை சரியாகணும்னா, தண்ணீரில் மிதக்கும் பரிகாரம் ஒன்று இருக்கிறது  என்று சொல்ல, தீபா தனக்கு நீச்சலும் தெரியாது, தண்ணீரில் மிதக்கவும் தெரியாது என்கிறாள், ரம்யாவும் என்ன நீங்க இவ்வளவு கஷ்டமானதை பரிகாரம்னு சொல்றீங்க என்று கேட்கிறாள். 

இதனையடுத்து பேசிய சாமியார், பீப்பாயில் உட்கார வைத்து, தண்ணீரில் மிதக்க விடுவோம். காலையில் இருந்து, சூரிய அஸ்தமனம் வரைக்கும், நம்பிக்கையான ஒருவரிடம் பீப்பாயில் கட்டிய கயிறை கொடுத்து விடுவோம்.. இந்த பரிகாரத்தை செய்யலனா நான் சொல்ற மாதிரி தான் நடக்கும் சொல்லி பயம் காட்டுகிறார். அடுத்து ஐஸ்வர்யா வீட்டில் உடம்பு முடியாமல் படுத்து இருக்க, அருணாச்சலம் அவளை கூப்பிடுகிறார். ஆனால், ஐஸ்வர்யா அப்படியே படுத்து இருக்க, அவரும் ரூமுக்குள் வந்து நான் கூப்பிட்டு கொண்டே இருக்கேன், நீ இப்படி படுத்து இருக்க, அங்க அபிராமி ஹாஸ்பிடலில் இருக்கா, நீ ஹாயா தூங்கிட்டு இருக்க என்று கோபப்படுகிறார்.

கோபமான அருணாச்சலம் 

ஐஸ்வர்யா அத்தைக்காக வேண்டிக்கிட்டு அலகு குத்திய விஷயத்தை சொல்ல, அருணாச்சலம் இதை முதல்லயே சொல்லி இருக்கலாம்ல என்று மனம் இறங்குகிறார். தொடர்ந்து, ஐஸ்வர்யா என்ன விஷயம் என்று கேட்க, அருணாச்சலம் பீரோவில் இருந்து பணம் எடுக்கணும் என்று சொல்வதோடு, நீ ரெஸ்ட் எடு, நானே எடுத்துகிறேன் என்று சொல்கிறார். ஐஸ்வர்யா பணம் என்றதும் நானே எடுத்துகிறேன் என்று சாவியை வாங்கி போய், பீரோவை திறக்கிறாள். 

அப்போது, பீரோ முழுவதும் நகையும் பணமுமாக இருப்பதை பார்த்து வாயை பிளக்கிறாள். இதனையடுத்து, தனது அம்மாவுக்கு இதனை வீடியோ கால் செய்து காட்ட, அவள் மொத்தத்தையும் ஆட்டைய போட்டுடலாம் நான் கிளம்பி வரேன் என்று சொல்கிறாள்.இதனையடுத்து, ஐஸ்வர்யா இப்போ எதுவும் செய்ய முடியாது, சந்தேகம் வராத மாதிரி செய்யணும். அதுக்கு ஐடியா சொல்லு என்று கேட்க, ராஜேஸ்வரி ஒரு ஐடியா சொல்கிறாள்.

ஐடியா கொடுத்த அம்மா 

பிறகு ஐஸ்வர்யா பணத்தை அருணாச்சலத்திடம் கொண்டு போய் கொடுக்க, அவர் பணத்தை மட்டும் வாங்கி கொண்டு, சாவியை மறந்து செல்ல, ஐஸ்வர்யா சந்தோசப்படுகிறாள், இந்த நேரம் பார்த்து மீனாட்சி அங்கு வந்து சாவியை கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.