Karthigai Deepam:மீனாட்சியின் மாஸ்டர் ஸ்கெட்ச்..கார்த்திக்கு காதல் தீ மூளுமா!
கார்த்திகை தீபம் சீரியல் எபிசோடின் இன்றைய அப்டேட்டை இங்கு படிக்கலாம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்; இந்த சீரியலில் இன்று நடக்கப்போகும் நிகழ்வுகளை டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னரே உங்களுக்கு எக்ஸ்க்ளூசிவாக தரும் முயற்சி இது.
இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஆனந்த் ஆபீஸ் விஷயமாக உடனடியாக பெங்களூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனை குறிப்பிட்டு மீனாட்சி, பொதுவாக ஆபீஸ் மீட்டிங் என்றால் கார்த்தி தானே போவாரு.. நீங்க எதுக்கு போறீங்க என ஆனந்திடம் கேட்க அவனுக்கு கல்யாணம் இருக்கு இல்ல... அதனால நான் போயிட்டு வரேன் என சொல்கிறான் ஆனந்த்
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைக்கும் மீனாட்சி கார்த்திக் மற்றும் தீபாவை ஒன்றாக வெளியே அனுப்பி வைக்க வேண்டும் என்று நினைக்கிறாள். மேலும் அதனால் இவர்களுக்குள் காதல் மலரும் என திட்டமிட்டு ஆனந்துக்கு காபியில் பேதி மாத்திரை கலந்து கொடுக்கிறார்.
இதனால் ஆனந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அப்போது அங்கு வரும் அருணாச்சலம், சரி நான் போயிட்டு வருகிறேன் என சொல்கிறான். ஐஸ்வர்யா நீங்க எதுக்கு போறீங்க... அருண் போகட்டும்... அவரால் இதெல்லாம் பண்ண முடியாதா என்ன என சொல்கிறாள்.
உடனே அருண் பெங்களூர் செல்ல ஓகே சொல்ல.. மீனாட்சி அருணையும் தடுத்து நிறுத்துவதற்காக அவன் ரூமின் வெளியே எண்ணெயை கொட்டி விடுகிறாள்; ஆனால் அங்கு அருணுக்கு பதிலாக ஐஸ்வர்யா வந்து வழுக்கி விழுகிறாள். இதனால் அருண் ஐஸ்வர்யாவை கவனித்துக் கொள்ளும் நிலை உருவாகி அவன் பெங்களூர் செல்ல முடியாமல் போகிறது.
இதனால் அபிராமி கார்த்திகை பெங்களூரு போயிட்டு வரட்டும் என சொல்ல மீனாட்சி பிளான் சக்சஸ் ஆகிறது. மேலும் அபிராமி சாமியாடி பெண் பூஜை செய்து கொடுத்த தாலியை கார்த்தியிடம் கொடுத்து போகும்போது துர்க்கை அம்மன் கோயில் குளத்தில் இந்த தாலியை போட்டுவிட்டு செல்லுமாறு சொல்கிறாள்.
மறுபக்கம் நட்சத்திரா தன்னுடைய காதலனுக்கு போன் செய்து இப்போதைக்கு நீங்க இருக்கிறது சரி வராது.. நீ பெங்களூரு போய்விடு என சொல்ல, அவன் பெங்களூர் கிளம்பி செல்கிறான். இதனால் நட்சத்திராவின் காதலன் கார்த்தியிடம் சிக்கிக் கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
டாபிக்ஸ்