Karthigai Deepam: கடுப்பான சாமுண்டீஸ்வரி.. சண்முக போட்ட ப்ளான்! - கார்த்திகை தீபம், அண்ணா சீரியல்களில் இன்று!
Karthigai Deepam: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் அண்ணா மற்றும் கார்த்திகை தீபம் தொடர்பான எபிசோட் அப்டேட்களை பார்க்கலாம்.

கார்த்திகை தீபம், அண்ணா சீரியல்களில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
என்ன நடக்கப்போகிறது?
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில், சாமுண்டீஸ்வரி புடவை எடுக்க கடைக்காரரை வீட்டுக்கு வர வைத்திருந்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்
கடுப்பான சாமுண்டீஸ்வரி
மாயா வீட்டுக்கு வர அவளை பார்த்த சாமுண்டீஸ்வரி கடுப்பானாள். இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், உங்களுக்கு பிடித்த புடவையை எடுத்துக்கோங்க என கூறினாள்.
இதற்கிடையில், பரமேஸ்வரி பாட்டி மயில்வாகனத்திற்கு போன் செய்து, ஒரு இடத்திற்கு வர சொல்ல, மயில் வாகனம் ராஜராஜனிடம் சொல்லி விட்டு கிளம்பி செல்கிறான்.
இதையும் படிங்க: - சலார் 2 முதல் கல்கி 2 வரை..பிரபாஸ் மீது கட்டப்பட்டிருக்கும் பந்தயம்
கலந்து வைத்த மயில்வாகனம்
பாட்டி ஒரு புடவையை கொடுத்து, ரேவதி எடுக்கும் புடவைக்கு பதிலாக அதனை மாற்றி வைக்க சொல்கிறார். அதன் படி, வீட்டுக்கு வந்த மயில் வாகனம் புடவைகளோடு இதை கலந்து வைக்க, ரேவதி அந்த புடவையை தேர்வு செய்ய, சாமுண்டீஸ்வரியும் ஓகே என்றாள்.
அதை தொடர்ந்து கார்த்திக்கிடம் மயில் வாகனம் அந்த புடவை பாட்டி கொடுத்த புடவை என்ற விஷயத்தை கூறினான். ஒரு கட்டத்தில் ரேவதிக்கும் புடவை குறித்த விஷயம் தெரிய வருகிறது.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
அண்ணா சீரியல் எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் சனிக்கிழமை எபிசோடில், சண்முகம் பரணியை அமெரிக்கா போக வேண்டாம் என சொன்னதால், பரணி அவன் மீது கோபமான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சௌந்தரபாண்டி பரணியை அமெரிக்க அனுப்பி வைத்து, சண்முகம் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என திட்டம் போட்டு இருந்ததை சண்முகம் தெரிந்து கொண்டான்.
ஆனால், இதை எப்படி பரணியிடம் சொல்வது என புரியாமல் தவித்தான். மறுபக்கம் இசக்கி, அண்ணா ஏதோ ஒரு காரணத்துக்காக தான் இப்படி சொல்லி இருக்கு. கண்டிப்பா பரணியை வெளிநாடு அனுப்பி வைக்கும் என்று சொல்ல, முத்துப்பாண்டி அவன் அனுப்பலனாலும் நான் அனுப்பி வைப்பேன்; என் தங்கச்சி ஆசைப்பட்டது நடக்க வேண்டாமா என்று சொன்னான்.
இதையெல்லாம் தாண்டி, அடுத்த நாள் காலையில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் பரணி வழக்கம் போல எல்லாவிதமான வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள். இதைப்பார்த்த வைகுண்டம் சந்தோஷப்பட்டார். சூடாமணிக்கு அடுத்ததா பரணி தான் இந்த குடும்பத்தை நல்லபடியா பார்த்துக்கிறா.. அவ இல்லனா என்ன ஆகிறது என யோசித்தான்.
சண்முகம், எலே உனக்கு கொண்டு போய் விடணுமா என்று கேட்க, இத்தனை நாளா நீதானே கொண்டு போய் விடுவ; இன்னைக்கு நீதான் கொண்டு போய் விடனும் என்று சொன்னாள். இதைக்கேட்ட சண்முகம், இந்த நேரத்துக்கு ஒரு சண்டை வெடித்து இருக்கணுமே இவ என்ன இப்படி சொல்றா என குழப்பம் கொண்டான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

டாபிக்ஸ்