Karthigai Deepam: கொலை வெறியில் துங்கா.. கடைசி நொடியில் நர்ஸ் செய்த தந்திரம்.. - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: ஐசியூவில் தீபா.. தட்டி தூக்க பிளான் போடும் துங்கா, கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
தாலியோடு அலையும் கார்த்திக்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் கையில் தீபாவின் தாலி கிடைத்தது. இதையடுத்து அவன் தீபாவை ஹாஸ்பிடலில் சேர்த்த பெண்மணி வீட்டிற்கு வந்து விசாரித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஐசியூவில் தீபா
அதாவது கார்த்திக்கிடம் அந்த பெண்மணி தீபாவை சென்னையில் உள்ள கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டதாக சொல்ல, கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வருகிறான். மறுபக்கம் தீபா ஐசியூவில் இருக்க, அதே ஹாஸ்பிடலுக்கு வந்த ஐஸ்வர்யாவின் உறவினர் ஒருவர், தீபா ஐசியூவில் இருப்பதை பார்த்து ஐஸ்வர்யாவுக்கு தகவல் கொடுத்து விடுகிறார். இதையடுத்து அவளும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறாள்.