Karthigai Deepam: ‘தீபாவிற்குள் இறங்கிய சக்தி..உருட்டி விடப்பட்ட ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: தீபாவுக்குள் புகுந்த சக்தி.. பேரரில் உருட்டி விடப்பட்ட ரம்யா, அடுத்து நடந்தது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
கார்த்திகை தீபம் சீரியலில் இன்று நடந்தது என்ன?
Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில், போலீஸ் பொருட்களை பறிமுதல் செய்து சென்றதால், பரிகாரத்தை அடுத்த நாள் தள்ளிவைத்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
தீபாவிற்குள் புகுந்த சக்தி
அதாவது, அடுத்த நாள் காலையில் தீபாவும், ரம்யாவும் பரிகாரம் செய்ய உள்ள இடத்திற்கு வந்து சேர்க்கின்றனர். ரம்யா எல்லாம் ரெடியா என்று சைகையில் கேட்க, போலிச் சாமியாரும், கண்ணை காட்டுகிறான். பிறகு தீபாவை பேரருக்குள் இறங்க சொல்ல, திடீரென அவளுக்குள் ஒரு சக்தி இறங்குகிறது. இந்த நிலையில், அவள் ரம்யாவை இறங்க சொன்னாள். இதைக்கேட்ட ரம்யா அதிர்ச்சி அடைந்தாள்.
தொடர்ந்து தீபா, நீ இறங்கியே ஆக வேண்டும் என்று சொல்லி ரம்யாவை அதட்டி அலற வைக்கிறாள். கூடவே, சாமியாரை சூடம் காட்ட சொல்ல, அவரும் காட்ட, அந்த சூடத்தையும் தட்டி விட்டு விடுகிறாள். அது அந்த ஆளின் கொண்டையில் பட்டு தீ பிடிக்க ஆரம்பித்து விட்டது. இதையடுத்து அந்த ஆள் அலறியடித்து ஓடினான். தொடர்ந்து, ரம்யாவின் கழுத்தை பிடித்து உள்ளே இறக்கிய தீபா பேரரை மூடி போட்டு மூடி தள்ளி விடுகிறாள்.