Karthigai Deepam: அம்மன்சேலையை உடுத்திய தீபா.. ஷாக் ஆன ரம்யா.. பிரம்மையில் சிக்கிய கார்த்திக்; கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: அவன், எங்க அம்மா அங்க உயிருக்கு போராடிட்டு இருக்காங்க, நீ சொத்தை பத்தி பேசிட்டு இருக்க, யார் கூட டி பேசிட்டு இருக்க என்று போனை பிடிங்கி பார்த்தான். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ரம்யாவின் சூழ்ச்சியில் சிக்கிய தீபா, கார்த்திக் செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்டை இங்கே பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரியா ஐஸ்வர்யாவை மாட்டி விட நினைத்தாள். இதற்கிடையே போன் செய்த ரியா, அப்படி செய்தால், உங்க அம்மாவை கொன்னுடுவேன் என்று மிரட்டிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
வைரத்தில் பங்கு
அதாவது, ஐஸ்வர்யா ரியாவிடம் இருக்கும் வைரத்தில் பங்கு கேட்க, ரியாவோ, நீ நான் சொல்ற மாதிரி நடந்துக்கிட்டா, நீ கேக்குற பங்கை கொடுப்பதோடு, உங்க அம்மாவுக்கு கொடைக்கானலில் ஒரு எஸ்டேட் மற்றும் ஒரு கம்பெனியையும் வாங்கி தருவேன் என்று சொல்கிறாள். இதை கேட்டு ஐஸ்வர்யா பேராசையில் கொடைக்கானலில் எஸ்டேட்டா என்று வாயை பிளக்க, அவளுக்கு பளாரென அறை விழுகிறது. யாரென்று பார்த்தால் அருண்.