Karthigai Deepam: ‘ஐஸ்வர்யா ஆடும் ஆடு புலி ஆட்டம்.. சிக்கித்தவிக்கும் ரம்யா’ - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு கிளம்பிய ரம்யா.. அடுத்தடுத்து ஐஸ்வர்யா செய்யும் சூழ்ச்சி - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் ரம்யாவும் போட்டி போட்டு கொண்டு கிஃப்ட் வாங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
கார்த்திகை தீபம் அப்டேட்:
அபிராமி வீட்டில் கல்யாண நாள் கொண்டாடத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து கேக்குடன் தயார் நிலையில் இருக்கின்றனர். மறுபக்கம் ஃபங்க்ஷன் கிளம்பிய ரம்யா, அப்பாவையும் ஃபங்க்ஷனுக்கு கூப்பிட, அவர் எனக்கு உடம்பு முடியல நீ மட்டும் போயிட்டு வா மா என்று சொல்கிறார்.
ஐஸ்வர்யா எப்படியாவது ரம்யா கார்த்திக் தீபா கல்யாண நாள் கொண்டாட்டத்திற்கு வருவதை தடுக்க வேண்டும் என்று யோசிக்கிறாள். இதற்காக பிளான் போட்டு ஒரு ஆளை ஏற்பாடு செய்து ரம்யா கிளம்ப உள்ள காரை ரிப்பேர் செய்து விடுகிறாள். இதனால் கார் ஸ்டார்ட் ஆகாமல் போய் விடுகிறது.
