Karthigai Deepam: மீனாட்சியை பார்க்க வந்த மாப்பிள்ளை.. ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா - கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai deepam: மீனாட்சியை பார்க்க வந்த மாப்பிள்ளை.. ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா -கார்த்திகை தீபம் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் ஃபேக்டரிக்கு வந்திருந்த வெளிநாட்டு பிசினஸ் மேன்களிடம், ஆங்கிலத்தில் பேசி மிஷின் குறித்து விளக்கம் கொடுத்த நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
காதலில் விழுந்த ரம்யா
கார்த்தி மீது ஏற்கனவே காதலில் விழுந்த ரம்யாவுக்கு, இதைப் பார்த்து அவன் மேல், மேலும் காதல் அதிகமாகிறது. அதைத்தொடர்ந்து அபிராமி வீட்டில் ஆனந்த் மற்றும் ரியா உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, யாரோ ஒருவர் மீனாட்சியை தேடி வீட்டிற்கு வருகிறார்.
வீட்டிற்கு வந்தவர், மீனாட்சி இருக்காங்களா அவங்கள பாக்கணும் என்று கேட்க, ஆனந்த் முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க என்று கேட்டான். உடனே அவர், மேட்ரிமோனியில் மாப்பிள்ளை வேணும்னு ஆள் கொடுத்து இருந்தாங்க; அதை பார்த்து தான் வந்தேன் என்றார். இதைக்கேட்டு கடுப்பாகும் ஆனந்த், மீனாட்சினு யாருமில்லை என்று சொல்லி அவரை துரத்துகிறான்.
மீனாட்சியை பெண் பார்க்க வந்த நபர்
இந்த நேரம் பார்த்து வெளியே வரும் தீபா, ஒரு நிமிஷம்… என்று சொல்லி, மீனாட்சி இந்த வீட்டு பொண்ணு தான் என்று கூப்பிட்டு உட்காரவைத்தாள். தொடர்ந்து, அவங்க வெளியே போயிருக்காங்க, நான் போன் போட்டு வர சொல்றேன் என்று சொல்லி, மீனாட்சியை வீட்டுக்கு வர வைக்கிறாள்.
மீனாட்சியை பார்த்ததும், அந்த நபர் அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்க, எப்ப கல்யாணம் வச்சுக்கலாம் என்று கேட்க, ஆனந்த் என்னது கல்யாணமா என்று அதிர்ச்சி அடைகிறான்.
உடனே, நீ எதுக்கு இப்ப கல்யாணம் பண்ண போற என்று மீனாட்சியிடம் ஆனந்த் சண்டை போட, அவளோ நீங்க உங்களுக்கு புடிச்ச ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தீங்க, அப்படி இருக்கும் போது, நான் எனக்கு புடிச்ச மாதிரி கல்யாணம் பண்ணிக்க கூடாதா என்று கேள்வி கேட்கிறாள்.
இதனையடுத்து ஆனந்த் பெண் கேட்டு வந்தவரிடம், அவ என் பொண்டாட்டி, இன்னும் விவாகரத்து கூட ஆகல என்று சொல்ல, பரவால்ல அதெல்லாம் வாங்கிக்கலாம் என்று சொல்லி கேஷுவலாக சொல்கிறார்.
தொடர்ந்து, ஆனந்த் அவளுக்கு ரெண்டு குழந்தை இருக்கு என்று சொல்கிறான். அதற்கும் அவர், ஓ அப்படியா… ரெண்டு குழந்தை பெத்த மாதிரி நம்பவே முடியல இன்னும் ஸ்லிம்மா அழகா இருக்கீங்க என்று மீனாட்சி பார்த்து அசடு வழிய, தீபா நாளைக்கு கோயில்ல வச்சு மீதியை பேசிக்கலாம் என்று அவரை அனுப்பி வைக்கிறாள்.
அதன் பிறகு தீபா மீனாட்சியிடம், அவருக்கு உங்க மேல இன்னும் காதல் இருக்கு, ரியா தான் ஏதோ பண்ணி வைத்திருக்கிறாள் என்று சொல்ல, மீனாட்சி ஆமா எனக்கும் இப்பதான் அவர் மேல கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கு என்று சொல்கிறாள்.
அடுத்ததாக, தீபா ரம்யா வீட்டுக்கு வர, ரம்யா அவளை வரவேற்று, தன்னுடைய அப்பாவிடம் இவள் தன்னுடைய ஸ்கூல் ஃப்ரெண்ட்தான் தீபா என்று அறிமுகம் செய்து வைக்கிறாள்.
ரம்யாவின் அப்பா கோடி கோடியா பணமும், சொத்தும் இருக்கு… ஆனா ரம்யாவுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசையா இருக்கு; கல்யாணத்துக்கு மட்டும் சம்மதம் சொல்ல மாட்டா; அவளுடைய கல்யாணத்தை பார்க்காமலேயே போய் சேர்ந்திடுவேன் போல என்று வருத்தப்பட்டு பேசினார். இதனையடுத்து தீபா அவகிட்ட நான் பேசுறேன் என்று ஆறுதல் சொன்னாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்