Karthigai Deepam: ‘கார்த்திக் - தீபா காதலில் விரிசல்.. கண்டுபிடித்த அம்பிகா! - கார்த்திகை தீபம் அப்டேட்!-zee tamil karthigai deepam serial latest today august 21 2024 episode update - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: ‘கார்த்திக் - தீபா காதலில் விரிசல்.. கண்டுபிடித்த அம்பிகா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘கார்த்திக் - தீபா காதலில் விரிசல்.. கண்டுபிடித்த அம்பிகா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 21, 2024 01:11 PM IST

Karthigai Deepam: கல்யாண மண்டபத்தில் நடந்த போட்டி.. தீபாவின் சவால் குறித்து அறியும் அம்பிகா, அடுத்து நடக்க போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: ‘கார்த்திக் - தீபா காதலில் விரிசல்.. கண்டுபிடித்த அம்பிகா! - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: ‘கார்த்திக் - தீபா காதலில் விரிசல்.. கண்டுபிடித்த அம்பிகா! - கார்த்திகை தீபம் அப்டேட்!

போட்டிக்களத்தில் கார்த்திகை தீபம்!

அதாவது, கல்யாண மண்டபத்தில் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சந்தோசமாக பேசுகின்றனர். பிறகு எல்லாரும் வட்டமாக உட்கார்ந்து, பாட்டு போட்டு ஒரு ஹார்ட்-ன் பில்லோவை கை மாற்றி விளையாடுகின்றனர். பாட்டு நிறுத்தப்படும் போது பில்லோ யாரிடம் இருக்கிறதோ, அவர் தங்களது துணையை பற்றி பேச வேண்டும் என்பது தான் இந்த போட்டி.

அருண், ஆனந்த், மீனாட்சி, தர்மலிங்கம் என ஒவ்வொருத்தராக தங்களது துணையை பற்றி பேசுகின்றனர். இறுதியாக தீபா கார்த்தி குறித்து பேச வேண்டிய சூழல் உருவாகிறது. அப்போது கார்த்திக்கை பற்றியும், தனது மனதில் இருக்கும் காதலை பற்றியும் தீபா பேசுகிறாள்.

கார்த்திக் - தீபா இடையே விரிசல்

தீபா பேசுவதை கேட்ட அம்பிகாவுக்கு கார்த்திக், தீபா இடையே ஏதோ விரிசல் இருப்பது போல் தோன்றுகிறது. இதனால், மீனாட்சியிடம் இது குறித்து பேச, அவள் தீபா கார்த்திக்கிடம் விட்ட சவால் குறித்து சொல்கிறாள். இப்படியான நிலையில், அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?

குடோனுக்கு வந்த கார்த்திக், ரவுடிகளை அடித்து துவம்சம் செய்து மைதிலியை காப்பாற்றினான். மறுபக்கம், ஐஸ்வர்யா என்னாச்சுன்னு தெரியலையே என்று சந்தேகப்பட்டு, ஐந்து கொலை ஆறுமுகத்துக்கு போன் செய்தாள். ஐந்து கொலை ஆறுமுகம் போனை எடுத்து தீபா வரல கார்த்திக் தான் வந்தான், எல்லாரையும் அடித்து போட்டுட்டு போய்ட்டான். இனிமே 1 வருஷத்துக்கு என்னை கூப்பிடாதீங்க என்று போனை வைத்தான்.

அடுத்து போலீஸ் ரியாவை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்க, அவள் என்னை எதுக்கு இங்க கொண்டு வந்தீங்க என்று கேள்வி கேட்டாள். அதற்கு போலீஸ் தரப்பு, நாங்க சொல்ற வரைக்கும் நீங்க இங்க தான் இருக்கனும் என்றது.

கழட்டிவிட்ட ரம்யா

பிறகு ரூமுக்கு சென்ற ரியா, ரம்யாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி எல்லாம் கார்த்தி பிளான் தான் என்று சொன்னாள். ரம்யா சரி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். இனி எனக்கு போன் பண்ணாத என்று சொல்லி, சிம் கார்டை உடைத்துப்போட்டாள். மறுபக்கம் மண்டபத்தில் தர்மலிங்கம் நாதஸ்வர கச்சேரி நடக்க அம்பிகா அதை கேட்டு ரசித்தாள்.

அம்பிகாவின் அட்ராசிட்டி

பிறகு அவருக்கு பிடித்த மூன்று சினிமா பாடல்களை சொல்ல, தர்மலிங்கம் அந்த பாடல்களையும் நாதஸ்வரத்தில் வாசித்து, அசர வைத்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.