Karthigai Deepam: தாலியை எடுத்து வைத்துக்கொண்ட ரம்யா..மாட்டி விட்ட மைதிலி; அதிர்ச்சியில் தீபா!-கார்த்திகை தீபம் அப்டேட்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: தாலியை எடுத்து வைத்துக்கொண்ட ரம்யா..மாட்டி விட்ட மைதிலி; அதிர்ச்சியில் தீபா!-கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: தாலியை எடுத்து வைத்துக்கொண்ட ரம்யா..மாட்டி விட்ட மைதிலி; அதிர்ச்சியில் தீபா!-கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 24, 2024 11:43 AM IST

Karthigai Deepam: அய்யர், இனிமே தாலி கிடைச்சாலும் பயன் இல்ல என்று சொல்ல, மைதிலி தாலி எங்க இருக்கன்னு எனக்கு தெரியும் என்று சொல்கிறாள். இதனையடுத்து எல்லோரின் பார்வையும் அவள் பக்கம் திரும்புகிறது. அவள் ரம்யா தான் எடுத்து இருப்பா என்று கையை காட்டுகிறாள். - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: தாலியை எடுத்து வைத்துக்கொண்ட ரம்யா..மாட்டி விட்ட மைதிலி; அதிர்ச்சியில் தீபா!-கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: தாலியை எடுத்து வைத்துக்கொண்ட ரம்யா..மாட்டி விட்ட மைதிலி; அதிர்ச்சியில் தீபா!-கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக், தீபா கழுத்தில் மறுதாலி கட்ட ஏற்பாடுகள் நடந்து கடைசி நொடியில் தாலி காணாமல் போன நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தாலியில் கேம் ஆடிய ரம்யா 

அதாவது, தாலி காணாமல் போனதையடுத்து, வீட்டில் உள்ள அனைவரும் வீடு முழுக்க சல்லடை போட்டு தாலியை தேடினர். நேரம் ஆகி கொண்டே போக, ஒரு கட்டத்தில், நல்ல நேரம் முடிந்து விடுகிறது. இந்த நிலையில் அய்யர், இனிமே தாலி கிடைச்சாலும் பயன் இல்ல என்று சொல்ல, மைதிலி தாலி எங்க இருக்கன்னு எனக்கு தெரியும் என்று சொல்கிறாள். இதனையடுத்து எல்லோரின் பார்வையும் அவள் பக்கம் திரும்புகிறது. அவள் ரம்யா தான் எடுத்து இருப்பா என்று கையை காட்டுகிறாள்.

இதனையடுத்து, ஆமாம் தாலி என்கிட்டே தான் இருக்கு அதிர்ச்சி கொடுக்கும் ரம்யா, தீபா கல்யாணமான போது, எப்படி மருமகளா இந்த வீட்டிற்கு வந்தாலோ, அதே மாதிரி எல்லாம் ஆரம்பத்தில் இருந்து நடக்கணும்னு ஆசைப்பட்டா, அதுக்காகதான் இப்படி பண்ணேன் என்று சொல்கிறாள். இதைக்கேட்ட, தீபாவும் ஆமாம் எனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கு, ஆனால் ரம்யா இப்படி செய்வான்னு எதிர்பார்க்கல என்று சொல்கிறாள்.

பதறி தவித்த அருணாச்சலம்

இந்த நிலையில் அபிராமி, தீபா ஆசைப்படியே செய்து விடலாம் என்று சொல்ல, தர்மலிங்கத்திற்கு ஜோசியர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவர் எதுக்கு அதெல்லாம் பண்ணனும்? அவ கழுத்தில் தான் மஞ்ச கயிறு இருக்கே, அதை அப்படியே விட்டுடலாம் என்று சொல்கிறார். இதையடுத்து, ஐஸ்வர்யா ஏன் கல்யாணம் பண்ணா செலவாகும்னு யோசிக்கிறீர்களா என்று கேள்வி கேட்க, அபிராமி இடையில் புகுந்து, பணத்தை பத்தி எல்லாம் நீங்க கவலையே படாதீங்க என்று சொல்கிறாள்.

இருந்தாலும், தர்மலிங்கம் வேண்டாம் என்று தடுக்க முயற்சி செய்ய, அது முடியாமல் போகிறது. அடுத்து ஜானகி எதுக்கு வேண்டாம் என்று சொல்றீங்க என்று கேட்டதும், ஜோசியர் சொன்ன விஷயத்தை சொல்ல, அபிராமி இதை பின்னாடி நின்றிருந்தது கேட்டு விடுகிறாள். பிறகு இவ்வளவு தான் விஷயமா, அதெல்லாம் கவலைப்படாதீங்க. இந்த கல்யாணம் நடக்கணும் என்று சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.