Karthigai Deepam: மயிரிழையில் தப்பித்த தீபா உயிர்.. மறுபடியும் ஸ்கெட்ச் போடும் ரம்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்
Karthigai Deepam: போலீசை பார்த்த போலி சாமியார் ஒளிந்து கொள்ள, போலீஸ்காரர்களோ, சாராயம் காய்ச்சறவங்க இங்க எங்கயாவது பக்கத்தில் தான் இருக்கனும், தேடி கண்டு பிடிங்க என்று சொல்ல, போலீஸ் லத்தியை தட்டி, தட்டி நாலாபுறமும் தேடினர். -கார்த்திகை தீபம் அப்டேட்

Karthigai Deepam: போலீசால் வந்த ட்விஸ்ட்.. பரிகார பூஜையில் வந்த தடங்கல் - கார்த்திகை தீபம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், போலி சாமியார் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்து, ரம்யாவையும் தீபாவையும் சீக்கிரம் வர சொல்லி இருந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
போலீசில் மாட்டிய போலிச்சாமியார்
அதாவது, போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் கால் வருகிறது. அந்த போனில், காட்டுக்குள் நடுவே இருக்கும் ஆற்று பகுதியில், கள்ள சாராயம் காய்ச்சப்படுவதாக சொல்லி தகவல் வர, போலீஸ் அந்த இடத்திற்கு கிளம்பிச் செல்கின்றனர். போலீஸூக்கு தகவல் கிடைத்தது போலவே, ஒரு ட்ரம்மிற்கு பூஜை போட்டு இருப்பதை பார்த்த போலீஸ், கள்ள சாராயம் காய்ச்சுவதே தவறு, இதுல அதுக்கு பூஜை வேற என்று சொல்லி கோபப்பட்டனர்.