Karthigai Deepam: கடத்தப்படும் அபிராமி.. கார்த்திக் செய்யப் போவது என்ன?.. பரபரக்கும் கார்த்திகை தீபம் சீரியல்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கடத்தப்படும் அபிராமி.. கார்த்திக் செய்யப் போவது என்ன?.. பரபரக்கும் கார்த்திகை தீபம் சீரியல்!

Karthigai Deepam: கடத்தப்படும் அபிராமி.. கார்த்திக் செய்யப் போவது என்ன?.. பரபரக்கும் கார்த்திகை தீபம் சீரியல்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Apr 01, 2024 12:25 PM IST

கடத்தப்படும் அபிராமி.. காயப்படும் தீபா, கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

கார்த்திக் கோயிலை நெருங்கும் நேரத்தில், அபிராமியை ரவுடிகள் கடத்தி விடுகின்றனர். உடனே கார்த்திக் வண்டி நம்பரை நோட் செய்து, போலீசுக்கு தகவல் கொடுக்கிறான். இன்னொரு பக்கம், கார்த்தியும் அபிராமியை தேடத் தொடங்குகிறான்.

பிறகு போலீஸ் கார்த்திக்கு போன் போட்டு, ரவுடிகள் இந்த  ஏரியாவை விட்டு தாண்டி இருக்க வாய்ப்பு இல்லை. இங்கேதான் எங்கேயாச்சும் இருக்கணும்..சீக்கிரம் தேடி கண்டுபிடித்து விடலாம் என்று சொல்லி ஃபோனை வைக்கின்றனர்.

மறுபக்கம் ரவுடிகள், அபிராமியை ஒரு குடோனுக்குள் அடைத்து வைக்க, இங்கே தீபா, அபிராமி அத்தையை இங்கதான் பக்கத்துல எங்கயாச்சும் மறைத்து வைத்திருக்கணும், ஏதாச்சும் குடோன்களில் தேடிப் பார்க்கலாம் என்று சொல்ல, போலீஸ், கார்த்திக், தீபா என எல்லோரும் கிளம்பிச் செல்கின்றனர்.

போலீஸ் உடன் கார்த்திக், தீபா வருவதை பார்த்த ரவுடிகள் அபிராமியை அங்கிருந்த பொருட்களை வைத்து மூடி வைக்கின்றனர். கார்த்திக் குடோனுக்குள் நுழைந்து, அபிராமி தேடி பார்க்க, அங்கும் யாரும் இல்லாததால் குழப்பம் அடைகிறான்.

இந்த நேரத்தில் கண் விழிக்கும் அபிராமி, கார்த்திக்கு எப்படியாவது தான் இங்கே இருப்பதை தெரியப்படுத்த வேண்டும் என முயற்சி செய்கிறாள். ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலையில், கார்த்திக் அங்கிருந்து கிளம்புகிறான். 

வெளியே வரும்போது அபிராமி பக்கத்தில் இருந்த ஒரு பொருள் கீழே விழுகிறது. இந்த சத்தத்தைக் கேட்டு, கார்த்திக் அபிராமியை தேடி கண்டு பிடிப்பானா இல்லையா என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

மீனாட்சி, ஐஸ்வர்யாவின் அம்மா ராஜேஸ்வரியின் முகத்தை மூடி அடி வெளுத்தெடுத்து அனுப்பினாள். இதனையடுத்து அவர் ஐஸ்வர்யாவிடம் சென்று நடந்த விஷயத்தை சொல்லி, தீபாவும் மைதிலியும் இப்படி பண்ணி இருக்க வாய்ப்பிருக்கு என்று கூறினாள். இதற்கு ஐஸ்வர்யா, அவங்க ஏன் அப்படி பண்ணனும் என்று கேட்டாள். 

மீனாட்சிக்கு இன்னும் கோபம் அடங்காமல் இருக்க, தனியாக சிக்கிய ரியாவையும் போட்டு வெளுத்தெடுத்தாள். இதை பார்க்கும் தீபா, மீனாட்சியை கூட்டி சென்றாள். 

மறுபக்கம் அபிராமி கோயிலை சுத்தம் செய்து கொண்டிருக்க, அதை பார்த்து பூசாரி உங்களுக்கு என்னமா பிரச்சினை சொல்லுங்க… தீர்த்து வைக்க முயற்சி செய்யுறேன் என்று சொல்கிறார். ஆனால் அபிராமி நீங்க தங்க இடம் கொடுத்ததே போதும் என்று சொன்னாள்.

பிறகு ஐஸ்வர்யாவும், ரியாவும் ரவுடி ஒருவனுக்கு பணத்தை கொடுத்து, நாங்க சொல்லும் போது அபிராமி கதையை முடிச்சிடு என்று கூறினர். எதுக்கு வெய்ட் பண்ணனும் கோயிலில் வைத்தே கொன்னுடுறேனன் என்று ரவுடி சொல்ல, ஐஸ்வர்யா கோயிலில் வைத்து பண்ணா பெரிய பிரச்சினையாகும் என்று சொன்னாள். 

தீபா அபிராமிக்காக வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்கு செல்வதாக கார்த்தியிடம் சொல்ல, அவன் அம்மா மனசு வருத்தத்தில் இருந்தா ஒரு கோயிலுக்கு போவாங்க, அந்த கோயில் தெரியுமா என்று கேட்க, தீபா தெரியாமல் முழிக்க, அவள் மீனாட்சியிடம் கேட்க அவளும் தெரியாமல் முழித்தாள். பிறகு தீபா, மீனாட்சி மைதிலி ஆகியோர் கோயிலுக்கு கிளம்பி வந்தனர். அங்கு தீபா அங்கப்ரசாதனம் செய்து கொண்டிருந்தாள். 

அபிராமியை கோயிலில் பார்க்கும் துப்புரவு பணியாளர் ராணிக்கு தகவல் கொடுக்க, ராணி கார்த்திக்கு தகவல் கொடுத்தாள். அவன் உடனடியாக கோயிலுக்கு கிளம்பிச் செல்கிறான். 

அதே போல் கோயிலில் மீனாட்சியை பார்த்த உறவுக்கார பெண் ஒருவரும், அபிராமியை காஞ்சிபுரம் கோயிலில் பார்த்ததாக சொல்ல, இவர்களும் காஞ்சிபுரத்துக்கு கிளம்பினர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.