தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Karthigai Deepam Serial Latest Episode Update

Karthigai deepam: உடைந்து போன பரமரகசியம்.. கோபத்தின் உச்சியில் கார்த்தி.. கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 27, 2024 04:57 PM IST

பயங்கர கோபத்துடன் தர்மலிங்கம் வீட்டுக்கு வந்த கார்த்திக்.. சிதம்பரத்துக்கு காத்திருந்த அதிர்ச்சி - கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், தீபா தான் பல்லவி என்ற உண்மை கார்த்திக்கு தெரிய வந்ததை தொடர்ந்து, இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தீபாதான் பல்லவி என்பதை அறிந்த கார்த்தி, கோபத்துடன் நேராக தீபா வீட்டிற்கு வந்து, தர்மலிங்கத்திடம் இவ்வளவு நாளா தீபா பாடிட்டு இருந்த விஷயத்தை எதுக்கு என்கிட்ட இருந்து மறைச்சீங்க; இது ரொம்ப பெரிய தப்பு என்று சாடினான். 

அதற்கு அவர், நீங்க கோபப்படுவதில் ஒரு நியாயம் இருக்கு.. ஆனா நடந்த விஷயங்களை முழுசா கேளுங்க என்று ராஜஸ்ரீ சத்தியம் வாங்கியது, தம்பிக்காக பாடுவது என அனைத்து விஷயங்களையும் சொன்னார். 

இனியனும், மாமா நீங்க அக்காவை தப்பா நினைக்காதீங்க உங்களுக்கு கோபம் இருந்தால், என்னை கூட அடிச்சுக்கோங்க என்று சொல்ல, கார்த்திக் சமாதானமாகி அங்கிருந்து கிளம்பி வருகிறான்.

தொடர்ந்து, இளையராஜாவிடம் பல்லவியாக பாடிக் கொண்டிருப்பது என்னுடைய மனைவி தீபாதான் என்று சொல்ல, அவனும் ஷாக் ஆகிறான். மேலும் கார்த்திக் இந்த விஷயத்தை வீட்டில் சொல்லப் போவதாக சொல்ல, இதனால் தீபாவுக்கு பிரச்சினை வராதா என்று இளையராஜா கேட்டான். 

அதற்கு கார்த்திக், இல்ல… தீபா இவ்வளவு நாளா சுமந்திருந்த சுமையை இறக்கி வைக்கட்டும் என கூறுகிறான். மறுபக்கம் தீபாவை வழிமறிக்கும் சிதம்பரம், தனக்கு பாடல் பாடி கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியதுடன், அதை செய்யாத பட்சத்தில், பல்லவி நீ தான் என்ற உண்மையை கார்த்திக்கிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறான். ஆனால், தீபாவோ தாராளமாக போய் சொல்லுங்கள் என்று பதிலடி கொடுத்தாள். 

இதைக்கேட்ட மீனாட்சி அந்த ஆள் பொய் சொல்லிட போறாரு என்று சொல்ல, போய் சொல்லட்டும். அப்போதுதான் அவருக்கு விஷயம் தெரியும். நானே அவரிடம் சொல்லலாம் என்று தான் இருக்கிறேன் என்று சொல்கிறாள். 

அதேபோல் சிதம்பரம் கார்த்தியை சந்தித்து, பல்லவி தீபா தான் என்ற உண்மையை உடைக்க, இது எனக்கே தெரியும் என்று கார்த்திக் அதிர்ச்சி கொடுக்கிறான்.

நீங்க என்னோட மியூசிக் கேரியரை கெடுக்க என்னென்னமோ பண்ணுங்க, இனிமேல் உங்களோடு கேரியரை நான் அழிக்கிறேன் என்று கார்த்திக் சவால் விட்டான். இதைக்கேட்ட சிதம்பரம் ஆவேசம் அடைந்தார். அத்துடன் கிளம்பி செல்லும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு காரும் ஆக்சிடென்ட் விட்டது. 

இதனிடையே, அபிராமி கார்த்திகை ஜாதகத்தை கொண்டு பொய் ஜோசியர் ஒருவரிடம் ஜாதகம் கேட்க, அவர் இப்போதைக்கு நேரம் சரியில்லை;

அவருடைய மனைவி தொடர்ந்து 52 நாட்கள் விளக்கு போட வேண்டும் என்றும் தவறினால் பெரிய பிரச்சினையாகிவிடும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.