தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Zee Tamil Karthigai Deepam Serial Latest Episode Today Update News Tamil

Karthigai deepam: மன்னிப்புக்கேட்டும் மயங்காத கார்த்திக். அழுது புலம்பும் தீபா.. கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 01, 2024 04:23 PM IST

மன்னிக்க மறுக்கும் கார்த்திக்.. தீபா செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் இங்கே!

கார்த்திகை தீபம்!
கார்த்திகை தீபம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், பர்த் டே ஃபங்க்ஷனில் தீபா தான்தான் பல்லவி என்ற உண்மையை கார்த்திக்கிடம் சொல்ல, எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்

கார்த்தி சொன்ன விஷயத்தை கேட்டு மீனாட்சி, அருணாச்சலம் ஆகியோர் சந்தோஷப்பட, அபிராமியோ இவ்வளவு பெரிய உண்மையை மறைச்சுருக்கன்னா.. நீ எவ்வளவு பெரிய கல் நெஞ்ச காரியா இருப்ப என கோபப்படுகிறாள். 

இதனையடுத்து உள்ளே வந்த கார்த்திக், தீபா தம்பிக்காக பாட ஒத்துக்கிட்டா. இந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்தியம் செய்ததால யார்கிட்டயும் சொல்லாம இருந்துருக்கா.. அவளை நான் பெரிய பாடகி ஆக்குவேன் என்று சொல்கிறான்.

அதுமட்டுமின்றி, நம்ம கம்பெனியில மட்டும் இல்லாம, மத்த நிறைய கம்பெனிகள்ல தீபாவ பாட வைப்பேன் என்று கூறுகிறான். அதற்கு அபிராமி, நம்ப கம்பெனியில் பாடுனா போதாதா? என்று கேட்க, மற்ற கம்பெனிகளில் பாடினால், தீபாவால் நம்ம குடும்பத்துக்கு தான் பெருமை என்று சொல்கிறான்.

இதைத்தொடர்ந்து தீபா கண்ணீருடன் ரூமுக்கு ஓட, கார்த்திக் பின்னால் சென்றான். கார்த்திக்கின் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்ட தீபா, நானே உங்ககிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம்னு தான் இருந்தேன். உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குன்னு சொல்லி இருந்ததும், இதைப்பற்றி சொல்ல தான் என்று கண்கலங்கி அழுதாள். 

மேலும், என்னை மன்னிச்சுடுங்க என்று கேட்க, கார்த்திக் அது மட்டும் முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறான். இதனையடுத்து, மீனாட்சி என்னாச்சி… கார்த்திக் என்ன சொன்னான் என்று கேட்க, தீபா நடந்த விஷயத்தை சொல்லி வருத்தப்படுகிறாள். 

அடுத்ததாக அபிராமி கல்யாணம் ஒன்றிற்கு ஐஸ்வர்யாவை கூட்டி செல்ல முடிவெடுக்க, கார்த்திக் தீபாவை அழைத்து செல்லுங்கள், கல்யாண பெண்ணுக்கு எடுப்பதாக சொல்லியிருந்த புடவையை தீபாவே எடுக்கட்டும் என சொல்கிறான். அதற்கு அபிராமியும் சம்மதம் தெரிவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.