Tamil News  /  Entertainment  /  Zee Tamil Karthigai Deepam Serial Episode Today Update

Karthigai deepam: சிதம்பரம் கொடுத்த குடைச்சல்.. படகு போட்டி நடுவே நடந்த பச்சை துரோகம் - கா., தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 06, 2024 03:09 PM IST

சிதம்பரத்துக்காக பாடி கொடுத்த தீபா.. கார்த்திக்கு நடந்த துரோகம்? கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும் போது செல்வி பாட்டி மோதிரத்தை கழட்டி வைத்து விட்டு சாப்பிட, அந்த மோதிரம் காணாமல் போகிறது; இதனையடுத்து பாட்டி பதற, கார்த்திக் பயப்படாதீங்க மோதிரம் எங்கேயும் போயிருக்காது என்று சொல்லி சாந்த படுத்தினான். பிறகு அந்த மோதிரத்தை எடுத்தது வெயிட்டர் தான் என்று கண்டு பிடிக்கிறான்.

அந்த வெயிட்டர் மோதிரத்தை அடகு வைக்க சென்ற நிலையில், கார்த்திக் அவனை மிரட்டி மோதிரத்தை வாங்கி திருடிய வெயிட்டருக்கு அறிவுரை சொல்லி பணம் கொடுத்து வருகிறான். அடுத்ததாக கார்த்திக் இந்த ரெஸ்ட்டாரெண்டை வாங்கிடலாம். ஆனால் வீட்டு மருமகள்கள் பெயரில் வாங்கலாம் என்று சொல்கிறான். 

உட்னே அருண், நான் ஐஸ்வர்யா பெயரில் வாங்கலாம் என்று இருந்ததாக சொல்ல, ஆனந்த் ஏன் மீனாட்சி பெயரில் வாங்கலாம் என்று சொல்ல, செல்வி பாட்டி படகு போட்டி வைக்கலாம் அதில் வெற்றி பெறுபவரின் மனைவி பெயரில் வாங்கலாம் என்று சொல்ல, விவாதம் முடிவுக்கு வந்தது. 

கார்த்திக், நான் இந்த போட்டியில் ஜெயித்தால் மூன்று மருமகள்கள் பெயரில் வாங்க வேண்டும் என்று சொல்ல, போட்டி தொடங்குகிறது. இந்த சமயத்தில் தீபாவுக்கு போன் செய்யும் சிதம்பரம் உடனடியா நீ வந்து பாடியாகணும். அப்படி வரலைனா கார்த்திக் உயிரோட இருக்க முடியாது. படகில் அவன் கூட போறது என்னுடைய ஆள் என்று மிரட்ட, தீபா அதிர்ச்சி அடைகிறாள்.

இதனால் போட்டி நடக்கும் இந்த கேப்பில் சிதம்பரத்தின் ஸ்டூடியோவுக்கு சென்று பாடி கொடுத்து விட்டு வருகிறாள் தீபா. போட்டியில் கார்த்தி ஜெயிக்க, அருணாச்சலம் இப்போதைக்கு ரெஸ்டாரண்ட் வாங்க வேண்டாம் என்று முடிவெடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.